தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள 10 ஆயிரத்து 718 பணிகளுக்காக கடந்த மாதம் 7ம் தேதி குரூப்-4 தேர்வு நடைபெற்றது. இதற்கான முடிவுகளை வெளியிடக்கூடாது என்று தர்மபுரியைச் சேர்ந்த சின்னசாமி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில், எனக்கு வழங்கப்பட்ட வினாத்தாளில் 200 கேள்விகளுக்குப் பதில் 195 கேள்விகளே இடம்பெற்றிருந்தன என்று கூறியிருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, குரூப்-4 தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்தார். மேலும் கேள்வித்தாளில் உள்ள குளறுபடி குறித்து டி.என்.பி.எஸ்.சி. பதில் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment