NCERTி, நேஷனல் டேலன்ட் சர்ச் எக்ஸாமினேஷன் 2013 என்ற பெயரில் ஒரு உதவித் தொகையை வழங்குகிறது. பெற தகுதியானவர்கள் - அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகள் 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளால் நடத்தப்படும் 10ம் வகுப்பு நிலை 1 தேர்வை எழுத தகுதியுடையவர்கள் இதைப் பெறலாம். விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய http://www.ncert.nic.in/programmes/talent_exam/pdf_files/application_form.pdf என்ற இணையதளம் செல்க. நிரப்பப்பட்ட விண்ணப்ப படிவத்தில் சம்பந்தப்பட்ட பள்ளி முதல்வர் கையெழுத்திட்டிருக்க வேண்டும். தேர்வுமுறை 2 நிலைகளிலான தேர்வுமுறைகள் உள்ளன. நிலை 1 முறையில், எழுத்துத் தேர்வு அடிப்படையில் மாநில மற்றும் யூனியன் பிரதேச அளவில் நடைபெறும். நிலை 1ல் தேர்ச்சி பெற்றவர்கள், என்சிஇஆர்டி, தேசிய அளவில் நடத்தும் நிலை 2 தேர்வை எழுத தகுதியுடையவர்கள். உதவித்தொகை தேர்வு நடத்தப்பட்ட அடிப்படையில், 10ம் வகுப்பு தேர்வை எழுதவுள்ள, ஒவ்வொரு குழுவைச் சேர்ந்த மாணவர்களுக்கும் 1000 உதவித்தொகைகள் வழங்கப்படும். இந்த உதவித்தொகையின் மதிப்பு மாதம் ரூ.500 என்ற அளவில் இருக்கும். விண்ணப்பிக்கும் இறுதிநாள் - 31 ஆகஸ்ட் நிலை 1 தேர்வு மிசோரம், மேகாலயா, நாகாலாந்து மற்றும் அந்தமான்-நிகோபர் தீவுகளில் நவம்பர் 17, 2012 அன்றும், இதர மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நவம்பர் 18, 2012 அன்றும் நடைபெறும். நிலை 2 தேர்வு (தேசிய அளவில்) அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 12 மே, 2013 அன்று நடைபெறும். இவை குறித்த விரிவான விபரங்களை அறிய www.ncert.nic. என்ற இணையதளம் செல்க
No comments:
Post a Comment