இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Friday, August 17, 2012

பள்ளி வளாக மரங்களை வேருடன் வெட்டக்கூடாது

பள்ளி வளாக மரங்களை வேருடன் வெட்டக்கூடாது: கல்வி அலுவலர்-
"பள்ளி வளாகத்தில் உள்ள மரங்களை எக்காரணம் கொண்டும் வேருடன்  வெட்டக்கூடாது. மேலும், வகுப்பு நேரங்களில் ஆசிரியர்கள் மொபைல் போன்  உபயோகிக்கக் கூடாது; மொபைல் போன் பயன்படுத்தும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,&'&' என முதன்மை கல்வி  அலுவலர் ஆனந்தி எச்சரித்து உள்ளார். அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு நலத்திட்ட உதவி வழங்குவது தொடர்பாக, திருப்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம், விவேகானந்தா  வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. அரசு, அரசு உதவி பெறும், சுயநிதிப்பள்ளி தலைமை  ஆசிரியர்கள் பங்கேற்றனர். பள்ளியின் பெயர், மாணவர் எண்ணிக்கை, இலவச காலணி, சைக்கிள், கல்வி உதவித்தொகை, புத்தகப்பை எவ்வளவு தேவை என்பது போன்ற அனைத்து தகவல்களுடன் கூடிய விண்ணப்பத்தை, தலைமை ஆசிரியர்கள் பூர்த்தி செய்து வழங்கினர். முதன்மை கல்வி அலுவலர் ஆனந்தி பேசியதாவது: நலத்திட்ட உதவிகளுக்கான பயனாளிகள் பட்டியல் தயாரிப்பதில் ஏற்படும் குளறுபடிகளை தவிர்க்க, மாவட்டம்தோறும் நடப்பு கல்வியாண்டில் அனைத்து பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் முழு விவரங்களை சேகரிக்க பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தலைமை ஆசிரியர்கள், தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள விண்ணப்பத்தில், வகுப்பு வாரியாக மாணவர்களின் எண்ணிக்கை, வருகைப்பதிவு, பல்வேறு நலத்திட்டங்கள் பெற தகுதியான மாணவர் எண்ணிக்கை, ஜாதி வாரியாக மாணவர் விவரங்களை பூர்த்தி செய்து வழங்க வேண்டும். அதனடிப்படையில், நலத்திட்ட உதவிகள் பெறும் பயனாளிகள் பட்டியல் தயாரிக்கப்படும். இலவச சைக்கிள்கள் தயாராகி வருகின்றன. இலவச காலணி, "அட்லஸ்", புத்தகப்பை போன்றவற்றுக்கான டெண்டர் நிறை வடைந்துள்ளது. வரும் செப்., மாதத்துக்குள் அனைத்து கல்வி உபகரணங்களும் வந்துவிடும்; அதன்பின், மாணவர்களுக்கு வழங்கப்படும். அனைத்து பள்ளி ஆசிரியர்களும் காலையில் பிரார்த்தனை கூட்டம் துவங்குவதற்கு, 10 நிமிடம் முன்பாக வகுப்புகளுக்கு வர வேண்டும்; மாணவர்களை ஒழுங்குபடுத்தி வகுப்பறைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். மாணவர்கள் பள்ளிக்கு எந்த வாகனத்தில் வருகின்றனர் என்பது குறித்து, பள்ளி நிர்வாகங்கள், ஆசிரியர்கள் கண்டறிய வேண்டும்; ஆபத்து விளைவிக்கும் வகையில் மாணவர்கள் வருவதை தடுக்க வேண்டும். மழைக்காலம் நெருங்குவதால், பள்ளி சுற்றுப்பகுதிகளில் விழும் நிலையில் உள்ள மரங்களை அகற்ற வேண்டும்; மின் கம்பிகள் மீது உரசும் மரக்கிளைகளை வெட்ட வேண்டும். எக்காரணம் கொண்டும் மரங்களை வேருடன் வெட்டக்கூடாது; மீறி வெட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும். பயன்பாடு இல்லாத பழைய கட்டடங்களை அனுமதி பெற்று, இடிப்பதற்கு முயற்சிக்க வேண்டும். பள்ளியில் வகுப்பு நேரங் களில் ஆசிரியர்கள் மொபைல் போன் உபயோகிக்கக் கூடாது; மொபைல் போன் பயன்படுத்தும் ஆசிரியர்கள் மீது கடும்  நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களின் பிரச்னைகளை கண்டறிய, அவ்வப்போது, "கவுன்சிலிங்" நடத்த வேண்டும். நல்லொழுக்க புத்தகங்கள் வழங்கி, மாணவர்களை படிக்கச் செய்ய வேண்டும். இதன் மூலம், மாணவர்களுக்கு தன்னம்பிக்கை வளர்வதுடன், சிந்திக்கும் திறன் மேம்படும், என்றார். « முதல் பக்கம்

No comments:

Post a Comment