்
கல்லூரிகளிலும் நடந்துள்ள கல்வி உதவித்தொகை முறைகேடுகள் குறித்து, தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும் என அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பின் தமிழக செயலாளர் சண்முகராஜா கூறினார். ராமேஸ்வரத்தில் அவர் கூறிதாவது: தமிழக கல்லூரிகளில் "ராகிங்&' நடப்பதை தவிர்க்க மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். சென்னை, கோவையில் மாணவர்கள், சினிமா நடிகர்களை அழைத்து வந்து அழகிப்போட்டி, விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளை நடத்துவது போன்ற கலாசார சீரழிவுகளை தடுக்க வேண்டும். கல்லூரிகளுக்கு பொதுவான பாடத்திட்டம் கொண்டு வருவதுடன், கல்வி கண்காணிப்புக்குழு அமைக்க வேண்டும். கல்லூரிகளிலும், மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கியதில் முறைகேடுகள் நடந்துள்ளது.மேலும் விளையாட்டு, என்.சி.சி., என்.எஸ்.எஸ்., போன்றவற்றிலும் முறைகேடுகள் நடந்துள்ளதால், தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும். மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்குவதைவிட, தரமான கல்வி வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
Sunday, August 12, 2012
கல்லூரிகளிலும் உதவித்தொகை முறைகேடு: விசாரிக்க வலியுறுத்த ல
Labels:
tnptfmani
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment