மத்திய அமைச்சர் விலாஷ் ராவ் தேஷ்முக் சென்னையில் காலமானார். கல்லீரல் மற்றும் சிறுநீரக கோளாறு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் 9 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த, அமைச்சர் விலாஷ் ராவ் தேஷ்முக் சிகிச்சை பலனின்றி பிற்பகல் காலமானார். விலாஷ் ராவ் கல்லீரல்மாற்று சிகிச்சைக்காக சென்னைக்கு கொண்டு வரப்பட்டிருந்தார். மத்திய அறிவியல் தெழில்நுட்ப துறை அமைச்சராக இருந்து வந்தவர் விலாஷ் ராவ் தேஷ்முக். மகாராஷ்டிர முதல்வராகவும் விலாஷ் ராவ் தேஷ்முக் பதவி வகித்துள்ளார். நாடாளுமன்றம் ஒத்திவைப்பு மத்தியமைச்சர் விலாஷ் ராவ் தேஷ்முக்கின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விலாஷ் ராவ் தேஷ்முக்கின் மறைவையொட்டி மத்திய அரசு அலுவலகங்களில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தலைவர்கள் இரங்கல் விலாஷ் ராவ் தேஷ்முக் மறைவிற்கு குடியரசுத் தலைவர் பிரணாப், பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். நாளை இறுதி சடங்கு விலாஷ் ராவ் தேஷ்முக்கின் இறுதி சடங்கு அவரது சொந்த ஊரான, மராட்டிய மாநிலம் பயல்கானில் நாளை நடைபெறுகிறது.
No comments:
Post a Comment