டெங்கு காய்ச்சலை தடுப்பது குறித்து, 'மொபைல் ஆப்' ஒன்றை, குடும்ப நலத்துறை வெளியிட்டுள்ளது. டெங்கு காய்ச்சலால், உயிரிழப்பு அதிகரித்து வரும் நிலையில், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, 'மொபைல் ஆப்' ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது.
'டெங்குவை தடுப்போம்; கொசுக்களை ஒழிப்போம்' என துவங்கும் பக்கத்தின் முகப்பில், கொசு உற்பத்தியாகும் இடங்கள், கேள்வி - பதில், சித்த மருத்துவம், தகவல் மற்றும் உதவி, ஆடியோ, குறும்படங்கள் என, ஆறு பகுதிகள் இடம் பெற்றுள்ளன. அதில், தண்ணீர் தேங்கி, கொசு உற்பத்தியாகும் இடங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. அத்துடன், நிலவேம்பு கஷாயம், மலைவேம்பு இலைச்சாறு, பப்பாளி இலை சாறு தயாரிப்பு முறை குறித்தும் விளக்கப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சல் குறித்த சந்தேகங்களுக்கு, 94443 - 40496 மற்றும் 93614 - 82899 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். காய்ச்சல் விழிப்புணர்வு குறித்து, பிரபலங்கள் பேசும் வீடியோக்களும் இடம் பெற்றுள்ளன
No comments:
Post a Comment