பொய்; உண்மையாகுமா?
"ஒரு பொய்யை பத்து முறை கூறு
உண்மை போன்று தோன்றும்"
"எப்போதுமே மக்களிடம் சின்ன பொய்யைச் சொல்லி அவர்களை ஆள்வது கடினம்.அதனால்,பெரிய பொய்களைச் சொல்லக் கற்றுக்கொள்ளுங்கள்"
-கோயபல்ஸ்
*உங்க மாநில செயலாளர் 2003 போராட்டத்தில் ஓடிவிட்டார் என ஆதாரமில்லாமல் பதிவிடும் நண்பர்களுக்கான விளக்கப்பதிவு.
2003 வரலாற்று சிறப்பு மிக்க போராட்டத்தில் ஒரு இயக்கம் மூன்றாம் நாள் பின்வாங்கியது.குற்றச்சாட்டு வைக்கும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி இப்போது போல் தொடர்ந்து களத்தில் இருந்தது.
4-7-2003 பணிக்கு திரும்பாவிட்டால் எஸ்மா பாயும் என்றது அம்மா அரசு.அதன் விளைவாய் 1,75,000 பேர் பணி நீக்கம்.6-3-03 இரவில் நீதியரசர் தினகரன் பணி நீக்க உத்தரவு ரத்து செய்தார்.தமிழக அரசு தீர்ப்புக்கு தடையாணை பெற்றது.சிஐடியு
டி.கே.ரங்கராஜன்,எஸ்.எஸ்.தியாகராஜன்,செ.குப்புசாமி,நளினி சிதம்பரம் ஆகிய 4பேர் பொதுநல வழக்கு தொடுத்தனர்.
16நாள் விசாரணைக்கு பின் 22 நாள் ஊதிய இழப்புடன் 6072 பேர் தவிர 1,64,169 பேர் பணியில் சேர்ந்தனர். இந்த 6072 பேரில் 999 பேர் நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட்டனர். பொதுச்செயலாளர் பர்வதராஜன் உட்பட
(இதில் திருப்பூர் வடக்கில் TNPTF ல் மட்டுமே இருவர் டிஸ்மிஸ்
*திரு லாரன்ஸ் நிர்மல்ராஜ்,நாராயணன்*
இருவர் மட்டுமே
உங்க பாணியில் சொல்லனும்னா.முன்னாள் பொறுப்பாளர்களை கேட்கவும்)
19-5-2004 ல் டிஸ்மிஸ் உத்தரவு ரத்து செய்யப்பட்டு பணிக்கு திரும்பினர். அப்போது TNPTF செ.நடேசன் "நல்ல சமயமிது நழுவவிட மாட்டோம்" எனும் துண்டு பிரசுரம் ஆசிரியர்கள் மனசாட்சியாக வலம்வந்தது.ஜூ.வி இதழிலும் இவரின் பேச்சு பெட்டிச் செய்தியாக வந்தது.
#இப்படிப்பட்ட போராளிகளை கொச்சைப்படுத்தும் விதமாக
உங்க பொறுப்பாளகள் 2003 ல் வரவில்லை.ஓடிவிட்டனர்.என அவதூறு பரப்புவோர்க்கு மனசாட்சி உண்டா?
#யாரோ எப்போதோ கைதட்டலுக்கு ஒரு கட்டுக்கதையை உங்களிடம் அவிழ்த்து விட்டிருப்பார்கள்.அதை இன்னுமா பிடித்து தொங்குவது
*இனியாவது கவுண்டமணியிடம் சின்னப்பையன் சொல்வானே
வெத்தல தோப்பு தெரியுமா
தோப்பு வீடாவது தெரியுமா னு
அது போல் மொட்டையாக பதிவிடாமல் ஆதாரத்துடன் பதிவிடுங்கள்
#நடுநிலை ஆசிரியர்களும், புதிய ஆசிரியர்களுக்கும் உண்மையை உரக்கச் சொல்லும் பதிவு இது
#2017 போராட்டத்தை யாரும் திரிக்க முடியாது.ஏனெனில் இப்போது இணையம் வந்துவிட்டது.
#ஆதாரத்துடன் வெளியிடுகிறேன். எதிர்ப்பவர்கள் ஆதாரத்துடன் பதிவிட வேண்டுகிறேன்
#Forward மெசேஜும் பொய்
Copy past ம் பொய்
தீர விசாரித்து டைப் பண்ணுவதே மெய்
தோழமையுடன் மணி
No comments:
Post a Comment