இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Monday, August 07, 2017

BSNL

மோடம்’ இல்லாமல் இன்டர்நெட் சேவை அறிமுகம்: லேண்ட்லைன் தொலைபேசி இணைப்புகளின் தரம் உயர்த்த பிஎஸ்என்எல் திட்டம்

ப.முரளிதரன்

மோடம் இல்லாமல் லேண்ட்லைன் தொலைபேசியிலேயே இன்டர் நெட் வசதியை பெறும் புதிய சேவையை பிஎஸ்என்எல் அறி முகப்படுத்தியுள்ளது. இதற்காக, இம்மாதம் 31-ம் தேதிக்குள், ரூ.23 கோடி செலவில் 2.32 லட்சம் லேண்ட்லைன் தொலைபேசி இணைப்புகளின் தரம் உயர்த் தப்பட உள்ளன. இதன் மூலம், வாடிக்கையாளர்கள் லேண்ட் லைன், மொபைல் போன் இணைப்புகளை ஒருங்கிணைத்து பேசுதல், ஆடியோ, வீடியோ காலிங் மற்றும் வீடியோ கான்பரன்ஸ் உள்ளிட்ட பல்வேறு சேவைகளைப் பெற முடியும்.

இன்றைய நவீன யுக வாழ்க்கைக்கு தகவல் தொடர்பு இன்றியமையாததாக உள்ளது. இதனால் தொலைத்தொடர்புத் துறை நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு தங்களது வாடிக்கையாளர்களுக்கு பல் வேறு சேவைகளை வழங்கி வரு கின்றன. இந்நிலையில், அரசுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனமும் தனது வாடிக்கை யாளர்களுக்கு பல்வேறு சேவை களை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, பிஎஸ்என்எல் நிறுவனம் தமிழ்நாடு சர்க்கிள் முதன்மை பொது மேலாளர் (வளர்ச்சி) பி.வி.கருணாநிதி ‘தி இந்து’விடம் கூறியதாவது:

தொலைபேசி சேவையை வழங்கும் நிறுவனங்களில் முன் னோடி நிறுவனமாக பிஎஸ்என்எல் நிறுவனம் திகழ்கிறது. தமிழகம் முழுவதும் 11 லட்சம் தரைவழி தொலைபேசி வாடிக்கையாளர் களும், 5 லட்சம் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களும் உள்ளனர். தமிழகம் முழுவதும் 2000 தொலை பேசி இணைப்பகங்கள் உள்ளன.

எங்களது வாடிக்கையாளர் களுக்கு மதிப்பு கூட்டு சேவையை வழங்க பல்வேறு நடவடிக்கை களை மேற்கொண்டுள்ளோம். இதன்படி, வாடிக்கையாளர் களுக்கு அடுத்த தலைமுறை நெட்வொர்க் இன்டர்நெட் புரோட்டோகால் வசதியுடன் கூடிய ஒருங்கிணைந்த சேவை வழங்கும் திட்டத்தை அறிமுகப் படுத்தியுள்ளோம்.

மூன்று கட்டமாக செயல்படுத் தப்பட்டுவரும் இத்திட்டத்தின் கீழ், முதல் கட்டமாக, ரூ.14 கோடி செலவில் 26 தொலைபேசி இணைப்பகங்களில் 1.06 லட்சம் லேண்ட்லைன் தொலைபேசி இணைப்புகள் அடுத்த தலைமுறை நெட்வொர்க் இன்டர்நெட் புரோட்டோகால் வசதியுடன் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

இரண்டாம் கட்டமாக, ரூ.23 கோடி செலவில் 2.32 லட்சம் லேண்ட்லைன் தொலைபேசி இணைப்புகள் தரம் உயர்த்தப்பட உள்ளன. இதற்கான பணிகள் வரும் 31-ம் தேதிக்குள் முடிக்கப் படும். மூன்றாம் கட்டமாக ரூ.25 கோடி செலவில் ஆயிரத்து 500 சி.டாட் மேக்ஸ் தொலைபேசி இணைப்பகங்களில் உள்ள 6 லட்சம் லேண்ட்லைன் இணைப்பு கள் தரம் உயர்த்தப்படும். இப்பணி இந்த ஆண்டு டிசம்பருக்குள் முடிவடையும். நான்காம் கட்டமாக ரூ.20 கோடி செலவில் 2 லட்சம் லேண்ட்லைன் இணைப்புகள் தரம் உயர்த்தப்படும். இப்பணி அடுத்த ஆண்டு நிறைவடையும்.

இந்தப் புதிய சேவையின் மூலம், வாடிக்கையாளர்கள் மோடம் இல்லாமல் லேண்ட் லைன் போனிலேயே இன்டர்நெட் சேவையைப் பெறலாம். இதற்காக இன்டர்நெட் புரோட்டோகால் வசதி கொண்ட தொலைபேசி கருவியை (SIP Handset) பயன்படுத்த வேண்டும். லேண்ட்லைன் தொலைபேசி அழைப்புகளை மொபைல் போனிலும், மொபைல் போனுக்கு வரும் அழைப்புகளை லேண்ட்லைன் போன் வழியாகவும் மாற்றிப் பேசலாம். மேலும், ஆடியோ, வீடியோ காலிங் மற்றும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் அழைப்புகளை மேற்கொள்ள லாம். அத்துடன், வாட்ஸ்-அப்-பில் குழுக்களை ஏற்படுத்தி தகவல் களை பரிமாறிக் கொள்வதைப் போல இச்சேவையை பயன் படுத்தி நண்பர்கள், குடும்ப உறுப் பினர்கள் இடையே குழுக்களை ஏற்படுத்திப் பேசலாம்.

இதைத் தவிர, மொபைல் போனில் ப்ரீபெய்டு சேவை உள்ளது போன்று இந்த லேண்ட் லைன் போனிலும் ப்ரீபெய்டு சேவை வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், லேண்ட்லைன் போனுக்கான வழக்கமான மாதாந்திர கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் மேலும் பல கூடுதல் வசதிகளைப் பெற முடியும். இவ்வாறு பி.வி.கருணாநிதி கூறினார்.

No comments:

Post a Comment