சிறுவயதில் ஆதார் எண் பதிவு செய்தவர்கள் 15 வயது பூர்த்தியானதும் மீண்டும் பயோமெட்ரிக் தகவலை பதிவு செய்ய வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மின் ஆளுமை முகமை இதுகுறித்து மின் ஆளுமை இயக்குனர் ஜெ.குமரகுருபரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–
தமிழ்நாட்டு பொதுமக்களுக்கு ஆதார் எண் வழங்க ஏதுவாக தமிழகம் முழுவதும் 545 நிரந்தர சேர்க்கை மையங்களை தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் கீழ், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மின்னணு நிறுவனம் (எல்காட்) நிர்வகித்து வருகின்றன. 15 வயது முடிந்ததும் 1.10.2016 முதல் 31.12.2016 வரை 9 லட்சத்து 91 ஆயிரத்து 924 பேருக்கு ஆதார் எண்ணிற்கான பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 12.9.2016 அன்று மத்திய அரசால் வெளியிடப்பட்ட ஆதார் சேர்க்கை வழிமுறைகளின்படி, ஆதார் எண் கிடைக்கப் பெற்று பதினைந்து வயது பூர்த்தியான நபர்கள் தங்களது உயிரியத் தகவல்களை (பயோமெட்ரிக் இன்பர்மேஷன்) பதினைந்து வயது பூர்த்தியடைந்த நாளிலிருந்து 2 ஆண்டுகளுக்குள் மீண்டும் கட்டாயமாக நிரந்தர சேர்க்கை மையங்களுக்கு நேரில் சென்று அளிக்கவேண்டும்.
நிரந்தர சேர்க்கை மையங்களில்...
எனவே மேற்கூறிய ஆதார் வழிமுறைகளின்படி பொதுமக்கள் செயல்பட ஏதுவாக தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மின்னணு நிறுவனம் ஆகியவற்றால் நிர்வகிக்கப்படும் நிரந்தர சேர்க்கை மையங்களுக்கு 4.1.2017 முதல் நேரில் சென்று பதினைந்து வயது பூர்த்தியான நபர்கள் தங்களது உயிரியத் தகவல்களை அளிக்கவேண்டும். இந்த சேவை கட்டணமில்லா சேவையாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment