மாணவர்களின் ஆதார் எண்ணை, டிச., 20க்குள் பதிவு செய்ய, பள்ளிகளுக்கு, 'கெடு' விதிக்கப்பட்டு உள்ளது. அரசு, தனியார் பள்ளி மாணவர்களுக்கும், ஆதார் எண் பதிவு செய்து, அதை பள்ளி ஆவணங்களில் குறித்து வைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இதற்கான பணிகள், இரு ஆண்டுகளாக நடந்து வருகின்றன.
பல காரணங்களால், பல லட்சம் மாணவர்களுக்கு, இன்னும் ஆதார் எண் கிடைக்கவில்லை. எனவே, ஆதார் எண்ணை அடிப்படையாக கொண்ட, மின்னணு கல்வி மேலாண்மை திட்டமான, எமிஸ் திட்டத்திலும், மாணவர்களின் விபரங்களை, முழுமையாக பதிவேற்ற முடிவதில்லை. இந்நிலையில், அனைத்து பள்ளி மாணவர்களும் ஆதார் எண் பெறும் வகையில், பள்ளிகளில், தமிழ்நாடு கேபிள், 'டிவி' நிறுவனம் சார்பில், சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. யாரும் விடுபடாமல், டிச., 20க்குள், ஆதார் எண் பதிவு செய்ய, பள்ளிகளுக்கு, 'கெடு' விதிக்கப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment