தங்கல் விமர்சனம்
-மணி
நீண்ட நாள் கழித்து ஒரு நல்ல படம்.
ஓபனிங் சாங்கோ,பஞ்ச் டயலாக்கோ இல்லாமல் அமீர்கான் அறிமுகம்
சங்கர பாண்டி வாத்தியார் ங்கிறது பள்ளிகூட வாத்தியார் இல்ல,குஸ்தி சொல்லிக்குடுக்கிற குஸ்தி வாத்தியார் னு நினைக்க வைக்கும் அவர் உடல்வாகு.மல்யுத்தம் மீது இளமையிலிருந்து விளையாடி விருது பெறும் அமீர் வறுமை காரணமாக இலட்சியத்தை தியாகம் செய்கிறார்.ஒரு நிறுவனத்தில் மாத ஊதியத்தில் வேலை பார்க்கிறார்.பின் திருமணம்.
என் மகனை மல்யுத்த வீரனாக்குவேன் னு இலட்சிய வெறி குழந்தைக்கு கடத்த நினைக்கையில் பெண் குழந்தை பிறக்கிறது.
அடுத்த குழந்தை ஆணாக பிறக்க கிராமமே டிப்ஸ் தருகிறது.மீண்டும் பெண்.அடுத்தடுத்து பெண் என 4 பெண்கள்.
கிராமமே ஏளன பார்வை பார்க்கிறது.
வீட்டிலிருக்கிற மெடல்,இலட்சியமெல்லாம் ட்ரங்க் பெட்டியில் வச்சு பூட்டி விடுகிறார்.பெண் குழந்தை பார்க்கும்போதெல்லாம் கண்ணுல காசில்லாத ஏடிஎம்மை பார்ப்பது மாதிரி இருக்கிறது.
ஒரு முறை சக மாணவன் திட்டினான் என்பதற்காக கீதாவும்,பபிதாவும் புரட்டி எடுத்ததை பார்த்த அப்பா இருமகளையும் நீட் தேர்வுக்கு தயார் செய்யுற பிரைவேட் ஸ்கூல் மாதிரி ட்ரைன் அப் கொடுக்கிறார்.மனைவி எதிர்க்கிறாங்க.அவரிடம் அமீர் "ஒரு வருசம் மனசை கல்லாக்கிக்க,தோத்துட்டா வாழ்க்கை முழுசும் நான் மனசை கல்லாக்கிக்கிறேன்" சொல்றார்.
இடையில் அப்பா மீது கோபத்துடன் இருக்கும் பெண்கள் உறவுக்கார திருமணத்துக்கு சென்று டான்ஸ் ஆடுவதை அப்பா அங்கு வந்து அவர் அண்ணன் மகனை அடிக்கிறார்.
அந்த இரவு அதிக கோபம் மகள்களுக்கு அப்பா மீது.அப்போது திருமண பெண் உங்க அப்பா மாதிரி எனக்கு இல்லையேனு ஃபீல் பன்னுகிறார்.அப்போது அப்பாவின் தியாகம் புரிய ஆரம்பிச்சு சீரியசா பிராக்டீஸ் பண்ணுறாங்க.வர்தா புயலில் விழுந்த மரங்களை அப்புறபடுத்துவது மாதிரி
கைமேல் பலன் மாதிரி உள்ளூர் போட்டியில் கீதா ஆண்களுடன் மோதி வெற்றி பெறுகிறார்.ஊரே புது ஐநூறு ரூபாய்நோட்டை பார்த்த மாதிரி சந்தோசபடுறாங்க.இப்பிடியே தேசிய அளவில் தங்கம் வாங்குறாங்க கீதா.அப்பாவுக்கு அப்பவும் திருப்தி இல்ல.பெட்ரமாக்ஸ் லைட்டே வேணுங்கிற மாதிரி இந்தியா சார்பா விளையாடி தங்கம் வாங்கனும் னு சொல்றார்.
பாட்டியாலாவில் தேசிய விளையாட்டு பள்ளியில் சேர்த்து விடுறார்.அங்க பயிற்சியாளர் புது முறை சொல்கிறார்.அதில் ஒரு போட்டியில் கீதா தோற்றுவிடுகிறார்.மீண்டும் அப்பா அந்த ஊருக்கு வந்து பயிற்சி தருகிறார்.அப்பா டெக்னிக் பயன்படுத்தி இந்தியா சார்பாக தங்கம் வாங்கும்போதும், தங்கம் பெற்றவரின் நாட்டு தேசியகீதத்தை இசைக்கும்போது புல்லறிக்க வைக்கிறார் இயக்குநர்.
மனம் கவர்ந்தவை
*கதை அமீர்கானின் அண்ணன் மகன் சொல்கிறார்
*அனைத்து கதாபாத்திரங்களும் சம பங்கு
*ஒரு வருசம் மனசை கல்லாக்கிக்க,தோத்துட்டா வாழ்க்கை முழுசும் நான் மனசை கல்லாக்கிக்கிறேன்"
*இரண்டு பெண் பிறந்தால் ஆறுதல் சொல்பவரை அலட்சிய்ச்மாய் பார்த்து கடப்பது
*உள்நாட்டில் தங்கள்,வெளிநாட்டு வெள்ளி வாங்குனா மறந்திடுவாங்க.நீ தங்கம் வாங்கனும்.இந்தியாவுக்காக.
*மண்ணுக்கு நாம் கெளரவம் தரனும்.
அப்பதான் அது நமக்கு கவுரவம் தரும்
*அப்பாவா இருந்தா குரு வா இருக்க முடியல
குருவா இருந்தா அப்பாவா இருக்க முடியல
*ஆண் சமைச்சு பெண்ணுக்கு பரிமாற வைப்பார்
*யுத்தத்துல ஜெயிக்கிறதுக்கு முன்னாடி பயத்தை ஜெயிக்கணும்
*திட்டலுக்கு பதிலா இப்ப கைதட்டல்
கிராம மக்கள்
*யானைக்கு strength இருக்கலாம்
ஆனா சிறுத்தைக்கு Technical strength தெரியும்
இறுதியில் அமீர்கான் சொல்லும் சபாஷ் என்ற வார்த்தைக்கு கைதட்டலே சபாசுக்கு சம்மதம்
பெண்களை பெற்ற அனைவரும் கொண்டாடப்பட வேண்டிய படம்
No comments:
Post a Comment