இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, December 21, 2016

விதிகளை தளர்த்திய ரிசர்வ் வங்கி


விதிகளை மீண்டும் மாற்றியது ரிசர்வ் வங்கி

வங்கிக்கணக்கில் கேஒய்சி விவரங்கள் பூர்த்தி செய்யப்பட்டிருந்தால், ரூ.5,000க்கு மேல் செல்லாத நோட்டு டெபாசிட் செய்வதற்கு  தடையில்லை. விசாரணை எதுவும் இருக்காது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டு செல்லாது என  கடந்த நவம்பர் 8ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதன்பிறகு மக்கள் தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டை வங்கிக்கணக்கில் டெபாசிட்  செய்து மாற்றிக்கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்தது. இருப்பினும் கணக்கில் ரூ.2.5 லட்சம் வரை டெபாசிட் செய்தால் கேள்வி  இருக்காது. அதற்கு மேல் டெபாசிட் செய்பவர்கள் வருமான வரித்துறையிடம் வருவாய் ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என  தெரிவிக்கப்பட்டது.

பின்னர் மத்திய அரசு, ஜன்தன் உட்பட அனைத்து கணக்குகளிலும் டெபாசிட் செய்யப்படும் தொகை கண்காணிக்கப்படும். செயல்படாத அல்லது  நீண்ட நாட்களாக பெரிய அளவில் பரிவர்த்தனை அல்லாத கணக்கில் டெபாசிட் உயர்ந்தால் விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்தனர்.  இப்படி நாளும் மாறும் விதிகளால் மக்கள் பெரும் குழப்பம் அடைந்து வருகின்றனர். பழைய நோட்டு டெபாசிட் செய்வதற்கான அவகாசம்  இந்த மாதம் 30ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், ரிசர்வ் வங்கி கடந்த திங்கட்கிழமை புது அறிவிப்பு வெளியிட்டது. இதில், பழைய  ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டை வங்கியில் இனி ரூ.5,000 மட்டுமே டெபாசிட் செய்ய முடியும். அதற்கு மேல் டெபாசிட் செய்பவர்களிடம்  வங்கி அதிகாரிகள் 2 பேர் விசாரணை நடத்துவார்கள்.

இதில் தாமதமாக டெபாசிட் செய்வதற்கான காரணமும் கேட்கப்படும். விளக்கம் திருப்திகரமாக இருந்தால் மட்டுமே டெபாசிட் செய்ய  அனுமதிக்கப்படும் என தெரிவித்தது. இதற்கு பொதுமக்கள் மத்தியில்கடும் எதிர்ப்பு எழுந்தது. பழைய நோட்டு செல்லாது அறிவிப்புக்கு பிறகு  வங்கிகளில் கூட்டம் குவிந்தபோது, டிசம்பர் 30ம் தேதி வரை அவகாசம் உள்ளது. எனவே அவசரம் காட்ட வேண்டாம் என பிரதமரும்,  நிதியமைச்சரும் கூறியிருந்ததை சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பினர். இதை தொடர்ந்து நிதியமைச்சர் அருண்ஜெட்லி அளித்த விளக்கத்தில்,  மக்கள் தயக்கமின்றி ஒரே தவணையாக டெபாசிட் செய்யலாம்.

திரும்ப திரும்ப டெபாசிட் செய்யும்போது சந்தேகம் எழுகிறது என்றார். இதன்பிறகு ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்ட உத்தரவில், ‘‘கேஒய்சி  (உங்கள் வாடிக்கையாளரை தெரிந்து கொள்ளுங்கள்) விவரங்கள் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டிருந்தால், ரூ.5,000க்கு மேல் தாராளமாக  டெபாசிட் செய்யலாம். எந்த கேள்வியும் இருக்காது. கேஒய்சி விவரங்கள் உள்ளவர்களுக்கு முன்னர் அறிவித்த கட்டுப்பாடு பொருந்தாது’’ என  தெரிவித்துள்ளது.

அந்நிய செலாவணி விதி மீறல்: 5 வங்கிகளுக்கு அபாராதம்

அந்நிய செலாவணி மேலாண்மை சட்டம் 1999ல் உள்ள விதி முறைகளை மீறி செயல்பட்ட 5 வங்கிகளுக்கு அபராதம் விதித்து ரிசர்வ் வங்கி  நேற்று உத்தரவிட்டுள்ளது. இதன்படி, பாங்க் ஆப் அமெரிக்கா, பாங்க் ஆப் டோக்கியோ மிட்சுபிஷி, ராயல் பாங்க் ஆப் ஸ்காட்லாந்து,  ஸ்டாண்டர்டு சார்டர்டு வங்கி ஆகியவற்றுக்கு தலா ரூ.10,000, டட்சு வங்கிக்கு ரூ.20,000 விதிக்கப்பட்டுள்ளது.

* ரூ.5,000க்கு மேல் டெபாசிட் செய்தால், 2 அதிகாரிகள் விசாரணைக்கு பிறகே அனுமதிக்கப்படும் என 19ம் தேதி உத்தரவு வெளியானது.
* வாடிக்கையாளரின் விளக்கம் பதிவு செய்யப்பட்டு, கணக்கு தணிக்கை செய்ய முடிவு செய்திருந்தது.
* கரீப் கல்யாண் திட்டத்துக்கு மட்டும் டெபாசிட் உச்சவரம்பு இல்லை என அறிவிக்கப்பட்டது.
* டிசம்பர் 30 வரை அவகாசம் என்ற முடிவில் திடீர் கெடுபிடி புகுந்ததால் மக்கள் கொதிப்பு
* கடும் எதிர்ப்புக்கு பிறகு, முடிவில் பின்வாங்கிய ரிசர்வ் வங்கி, கெடுபிடியை தளர்த்தியது.
* ரூபாய் நோட்டு விவகாரத்தில் 43 நாளில் 60 மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

No comments:

Post a Comment