அரசுத் துறைகளில் தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெறும் பணியாளர்களுக்கு தனி உயர்வாக ரூ.20 முதல் ரூ.40 வரை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து, நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.சண்முகம் வெளியிட்ட உத்தரவு:
மாதத்துக்கு ரூ.600 வரை தொகுப்பூதியம், நிலையான ஊதியம், மதிப்பூதியம் பெறும் பணியாளர்களுக்கு தனி உயர்வாக மாதம் ரூ.20 அளிக்கப் படும். ரூ.600-க்கு மேலாக தொகுப்பூதியம்-நிலையான ஊதியம், மதிப்பூதியம் பெறும் பணியாளர்களுக்கு தனி உயர்வாக ரூ.40-ம் வழங்கப்படும். இந்த தனி உயர்வானது, உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் பணியாளர்கள், ஊரக வளர்ச்சி-ஊராட்சித் துறையின் கீழ் பணியாற்றும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள், துப்புரவு பணியாளர்கள் ஆகியோருக்கு பொருந்தும்.
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து மற்ற பிரிவினருக்கு தனி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளதாக தனது உத்தரவில் சண்முகம் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment