இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Monday, December 19, 2016

தொழில்கல்வி பாடத்திட்டம் முடக்கம்


: கோவையில், 35 அரசுப் பள்ளிகளில், தொழில்கல்வி
ஆசிரியர்கள் பணி ஓய்வு பெற்ற பின், காலிப் பணியிடங்களை நிரப்பாததால், பாடத்திட்டத்தை முடக்கியதாக புகார் எழுந்துள்ளது.

கோவையில், 70 அரசு மேல்நிலைப்பள்ளிகளில், தொழில்கல்வி பாடத்திட்டம், கடந்த 1985ல் துவங்கப்பட்டது. அக்கவுன்ட் ஆடிட்டிங், டைப் ரைட்டிங், ஊட்டச்சத்து, மனையியல் உள்ளிட்ட, 12 தொழிற்கல்வி பாடப்பிரிவுகள், பள்ளிகளில் கற்பிக்கப்படுகின்றன.

இப்பிரிவுகளுக்கு, 1990ல், ஆசிரியர் பணியிடம் நிரந்தரமாக்கப்பட்டது. அதற்கு பின், புதிய ஆசிரியர் பணியிடம் உருவாக்கவில்லை. தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளிலும், தொழிற்கல்வி பாடத்திட்டம் கொண்டுவரவில்லை.

கல்வியில் பின்தங்கிய மாணவர்களுக்கு, தொழிற்கல்வி பாடத்திட்டம், வரப்பிரசாதமாக உள்ளது. இதில், பொது இயந்திரவியல் பாடப்பிரிவில் படிக்கும் மாணவர்களுக்கு, இன்ஜி., கவுன்சிலிங்கில், மெக்கானிக்கல் படிப்பு தேர்வு செய்ய, முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

மேலும், 400 மதிப்பெண்கள் வரை, செய்முறை பகுதிகள் உள்ளதால், பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறலாம். இதனால், உயர்கல்வியில் சிறந்த கல்லுாரிகளில், மாணவர்களுக்கு சீட் கிடைக்கும். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த தொழிற்கல்வி பாடத்திட்டத்தை, மற்ற பள்ளிகளில் விரிவுப்படுத்தாமல், பள்ளிக்கல்வித்துறை அலட்சியம் காட்டி வருகிறது.

இந்நிலையில், மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்ட, புதிய கல்வி கொள்கை உள்ளீட்டில், தொழில்கல்வி பாடத்திட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்துள்ளது. ஆனால், மாநில அளவில், புறக்கணிக்கும் பாடத்திட்டமாக, தொழிற்கல்வி உள்ளது.

இப்பிரிவில், பணி ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கான காலிப்பணியிடத்தில், புதிய ஆசிரியர்கள் நியமிப்பதில்லை. இதனால், ஆசிரியரில்லாத பாடப்பிரிவுகளுக்கு, தற்காலிக பணி அடிப்படையில், ஆசிரியர்கள் நியமித்தால், ஊதியம் வழங்குவதில், சிக்கல் ஏற்படுகிறது. நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி, ஆசிரியரில்லாத பள்ளிகளில், தொழிற்கல்வி பாடப்பிரிவு முடக்கப்படுவதாக, புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத, தொழிற்கல்வி பாட ஆசிரியர் ஒருவர் கூறியதாவது:

மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும், தொழில்கல்வி ஆசிரியர்களுக்கு, பதவி உயர்வு இல்லை. கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்காததால், பணி ஓய்வு பெறும் வரை, ஒரே பள்ளியில் கற்பிக்கும் நிலை நீடிக்கிறது.

மேலும், கோவையில், குறிச்சி, தொண்டா முத்துார், மதுக்கரை உள்ளிட்ட, 35 பள்ளிகளில், ஆசிரியர் ஓய்வு பெற்றதால், பாடப்பிரிவு முடக்கப்பட்டுள்ளது. மற்ற பள்ளிகளிலும், விரைவில் ஆசிரியர்கள், ஓய்வு பெறும் நிலையில் உள்ளனர்.

காலிப்பணியிடத்தை நிரப்பாமல், தொடர்ந்து கல்வித்துறை மெத்தனம்காட்டினால், தொழில்கல்வி பாடத்திட்டமே இல்லாத நிலை உருவாகும்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment