இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Saturday, December 24, 2016

கிறிஸ்துமஸ் வரலாறு-பூ.கோ சரவணன்

xmas என்று கிறிஸ்துமஸ் விழாவை குறிக்கத்துவங்கி ஐநூறு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. கிறிஸ்து + மாஸ் தான் கிறிஸ்துமஸ். கிரேக்கத்தில் x என்கிற எழுத்தே கிறிஸ்துவை குறிக்கும் அதைக்கொண்டு xmas என்று சுருக்கி அழைக்கிறார்கள் இன்றுவரை.

கிறிஸ்துமஸ் மரம் இயேசு பிறப்பதற்கு முன்னரே வந்துவிட்டது ; பனிக்காலங்களில் பிறந்தநாளை கொண்டாட இந்த மரங்களை பயன்படுத்துகிற பழக்கம் இயேசு பிறப்பதற்கு முன்னமே இருந்துள்ளது.

லாட்வியா நாட்டில் கிறிஸ்துமஸ் மரங்களை அலங்கரிக்க துவங்கினார்கள் ; ஜெர்மனியின் மார்டின் லூதர் அதில் மெழுகுவர்த்தி ஏற்றினார். ஆல்பர்ட் என்கிற ஜெர்மானிய இளவரசரை மணந்து கொண்ட விக்டோரியா மகாராணி இங்கிலாந்துக்கு இந்த கிறிஸ்துமஸ் மரத்தை கொண்டு போக அங்கே இருந்து உலகம் முழுக்க பரவியது. இந்த மரத்தில் மின்விளக்குகள் வைக்கும் பழக்கத்தை கொண்டு வந்தது எடிசனின் உதவியாளர் எட்வர்ட் ஜான்சன். கிறிஸ்துமஸ் மரத்தை சாப்பிடலாம் ; அதன் முட்கள் வைட்டமின் சி நிறைந்தது.

கிறிஸ்துமஸ் உண்மையில் டிசம்பர் இருபத்தைந்து அன்று கொண்டாடப்பவில்லை மார்ச் 28,நவம்பர் 18 என்று மாறி மாறி கொண்டாடிக்கொண்டு இருந்தார்கள். போப் ஒன்றாம் ஜூலியஸ் தான் எல்லாரும் டிசம்பர் இருபத்தைந்து அன்று கொண்டாடும் பழக்கத்தை கொண்டு வந்தார் இது நடந்தது 350 A.D. !

கிறிஸ்துமஸ் தாத்தா செயின்ட் நிகோலஸ் துருக்கி நாட்டில் இருந்தவர் ; ஏழை எளியவர்களுக்கு உதவியவர். ஒரு முறை ஏழைப்பெண்கள் மூவருக்கு தங்க நாணயங்களை வீட்டு புகைப்போக்கி வழியாக அவர் போட.அதன் நினைவாக ஏழைகளுக்கு பரிசளிப்பது தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. ஜப்பானில் கிறிஸ்துமஸ் தாத்தா இல்லை ; பாட்டி தான். பாட்டிகள் தாத்தாவை விட அன்பானவர் என்கிறார்கள் இவர்கள்.

ஸ்பெயினில் கிறிஸ்துமஸ் அன்று பெரிய லாட்டரி போட்டி நடக்கும் ; ஜெர்மனியில் கிறிஸ்துமஸ் மரம் பிடுங்கும் போட்டிகள் உண்டு பல்கேரியாவில் மரத்தை அடுப்பெரிக்க கொண்டு வந்து கொண்டிருக்கும் பொழுது எல்லாரும் அதன் மீது சோளத்தை எறிந்து கொண்டாடுவார்கள். நார்வே நாட்டில் நம்மூர் மாட்டு பொங்கல் மாதிரியே பசுக்களை கவனிப்பார்கள். போலந்தில் இயேசுவுக்கு என்று ஒரு தனி மேஜை ; தனி சாப்பாடு.

நெதர்லாந்தில் கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கு ஒரு உதவியாளர் உண்டு ; பெயர் ப்ளாக் பெட்டி. குறும்பு செய்யும் பிள்ளைகளை மூட்டையில் பிடித்துப்போவது தான் இவரின் வேலை. நல்ல வேலை நாம எல்லாம் அங்கே பிறக்கலை.

கிறிஸ்துமஸ் தினத்துக்கு அடுத்த நாளுக்கு பாக்ஸிங் நாள் என்று பெயருண்டு. அன்றைய தினத்தில் இங்கிலாந்தில் வசூலிக்கப்பட்ட பணத்தை பாக்ஸ்களில் இருந்து பிரித்து கொடுப்பதை சர்ச்சுகள் வழக்கமாக வைத்திருந்தன என்பதால் இப்பெயர். அன்று நடக்கும் கிரிக்கெட் போட்டிகளில் யார் வெல்வார் என்று பெரிய எதிர்பார்ப்பே இருக்கும்.

முதல் உலகப்போர் சமயத்தில் கிறிஸ்துமஸ் துவங்கதற்கு கொஞ்ச நாள் முன்னர் ஜெர்மனிய வீரர்கள் கரோல் பாடல்கள் பாடி இங்கிலாந்து வீரர்களை வாழ்த்தினார்கள். முதலில் போர் தந்திரமோ என்று எண்ணிய இங்கிலாந்து வீரர்கள் பின்னர் நம்பி கைகொடுக்க அமைதியாக கிறிஸ்துமஸ் விழாவை போர்க்காலத்தில் கொண்டாடினார்கள் இரு நாட்டு வீரர்களும்.

ஜிங்கில் பெல்ஸ் எனும் கிறிஸ்துமஸ் பாடல் உண்மையில் கிறிஸ்துமஸ் நிகழ்வுக்காக எழுதபட்டது இல்லை. அது நன்றி அறிவிக்கும் நாளுக்காக பியர்பான்ட் என்பவர் தன்னுடைய மாணவர்கள் பாடுவதற்காக எழுதினார் எல்லாருக்கும் பிடித்து போய் அது கிறிஸ்துமஸ் பாடலாகி விட்டது.

கிறிஸ்துமஸ் அன்று ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு ஸ்வீட். பிரான்ஸ் தேசத்தில் பூசணி கேக்,ஸ்வீடனில் ஆடு வடிவத்தில் இருக்கும் ஜிஞ்சர் பிஸ்கட்,இங்கிலாந்தில் உலர் பழங்களில் செய்யப்படும் புட்டிங் இப்படி நீளும் அந்த சுவையான பட்டியல்.

கிறிஸ்துமஸ் தீவு என்றொரு தீவுக்கு பெயர் - கிறிஸ்துமஸ் தினத்தன்று 1643-இல் வில்லியம் மைனர்ஸ் எனும் மாலுமியால் கண்டுபிடிக்கப்பட்டதால் இந்த தீவுக்கு இப்படி ஒரு பெயர்.

நியூட்டன்,ஜின்னா,வாஜ்பாய்,மதன் மோகன் மாளவியா,இசைக்கலைஞர் நௌஷாத் அலி எல்லாரும் இதே தினத்தில் பிறந்தவர்கள்..!

- பூ.கொ.சரவணன்

No comments:

Post a Comment