அரசு ஊழியர் சங்க பிரதிநிதிகளை அழைத்து முதல்வர் ஜெயலலிதா பேசும் வரை போராட்டம் தொடரும்,'' என, சங்க மாநில செயலாளர் செல்வம் தெரிவித்தார். மதுரையில் அவர் கூறியதாவது:
புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்படும் என முதல்வர் ஜெ., கடந்த சட்டசபை தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டார். அது உட்பட 20 கோரிக்கைகளை நிறைவேற்ற நான்காண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். 72 முறை மனு கொடுத்திருக்கிறோம். பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டோம். தற்போதைய காலவரையற்ற போராட்டத்திற்கு அரசு தான் காரணம். எங்கள் கோரிக்கைகளை கேட்ட ஐந்து அமைச்சர்கள், 'நியாயமானது எனக்கூறியதுடன், முதல்வரிடம் கூறி நிறைவேற்றுவதாக,' தெரிவித்தனர். அமைச்சர்கள் முதல்வரின் கவனத்திற்கு இதை கொண்டு சென்றார்களா என்பது சந்தேகமாக உள்ளது.
எனவே உடனடியாக முதல்வர் ஜெ., சங்க பிரதிநிதிகளை அழைத்து பேசி கோரிக்கைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை போராட்டம் தொடரும். இந்த வேலை நிறுத்தத்தால் மக்களுக்கு பல்வேறு வகையில் பாதிப்புள்ளது. ஆசிரியர்களும் போராட்டத்தில் ஈடுபட இருப்பதால் பள்ளிகள் மூடப்படும் நிலையுள்ளது, என்றார்.
No comments:
Post a Comment