தமிழகத்தில் நாளை (பிப்.,15) நடக்கும் அரசு ஊழியர் வேலைநிறுத்தத்தில் பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு பங்கேற்காது,'' என, மாநில தலைவர் பேட்ரிக் ரேமன்ட் தெரிவித்தார். மதுரையில் அவர் கூறியதாவது:
தொகுப்பூதிய காலத்தை பணிக்காலமாக அறிவித்தல், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல், தொடக்கக் கல்வி துறையில் நேரடி நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுநிலை ஆசிரியர்களாக பதவி உயர்வு அளித்தல் உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றி இருக்கிறோம். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நாளை நடத்தும் போராட்டத்தில் பங்கேற்கவில்லை. பிப்.,௧௬ல் பட்ஜெட் தாக்கலாகும் வரை காத்திருப்போம். கோரிக்கைகள் நிறைவேற்றாத பட்சத்தில் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் பங்கேற்போம், என்றார். நிர்வாகிகள் வீரசிம்மன், ஜெயக்குமார், கிருபாகரன் மற்றும் பலர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment