இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Sunday, February 14, 2016

அரசு ஊழியர்கள் போராட்டம் தீவிரம் அடைகிறது : தமிழகம் ஸ்தம்பிக்கும் அபாயம்-தினகரன்


அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் தங்கள் போராட்டத்தை இன்று முதல் தீவிரமாக நடத்த திட்டமிட்டுள்ளன. இதனால், பல்வேறு துறைகள் முற்றிலும் முடங்குவதுடன், ரேஷனில் அரிசி, சர்க்கரை மற்றும் வருவாய் துறையில் சான்றிதழ், மாணவர்களுக்கு சத்துணவு வழங்குவது உள்பட அனைத்து பணிகளும் கடுமையாக பாதிக்கும். தமிழகத்தில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு 2011ம் ஆண்டு மே மாதம் பதவியேற்றது. பதவியேற்று 5 ஆண்டுகள் முடிவடைய உள்ளது.

ஆனால், இதுவரை ஒருமுறை கூட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சத்துணவு ஊழியர்கள், ரேஷன் கடை ஊழியர்கள் என எந்த சங்கங்களையும் ஜெயலலிதா நேரில் அழைத்து பேசி கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை.

திணறும்அமைச்சர்கள்: சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ளதால், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் 10.63 லட்சம் வாக்குகள் மற்றும் அவர்களது குடும்ப வாக்குகள் அதிமுகவுக்கு கிடைக்காமல் போய் விடும் என்ற அச்சத்தில், கடந்த இரண்டு நாட்களாக போராட்டம் நடத்தும் சங்கங்களுடன் மூத்த அமைச்சர்களான ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, பழனியப்பன் மற்றும் தலைமை செயலாளர் ஞானதேசிகன் அடங்கிய குழுவினர் பேசி வருகிறார்கள். குறிப்பாக பேச்சுவார்த்தையின் முடிவில் ‘உங்கள் கோரிக்கைகள் முதல்வர் ஜெயலலிதாவின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்வு காணப்படும்’ என்று தெரிவித்து வருகின்றனர். இது போராட்டத்தை நீர்த்து போகச் செய்யும் நடவடிக்கையாக தொழிற்சங்க பிரதிநிதிகள் கருதுகின்றனர்.

பேச்சுவார்த்தையில் உருப்படியான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்ைல. இதனால் இன்று முதல் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்த அரசு ஊழியர்களின் திட்டமிட்டுள்ளனர்.போராட்டம் தீவிரமாகும்: அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் பன்னீர்செல்வம் கூறியதாவது: ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு இதுவரை அக்கறை காட்டவில்லை. சமீபத்தில் அமைச்சர்கள் எங்களை அழைத்து பேசும்போது, ‘’உங்கள் கோரிக்கைகள் அனைத்தையும் முதல்வரிடம் தெரிவிப்பதாகவும், அவர் விரைவில் நல்ல முடிவெடுப்பார் என்றும்’’ ஆசை வார்த்தை காட்டினர். ஆனால், இதுவரை எந்த அறிவிப்பும் வரவில்லை. இதனால் அடுத்தக்கட்டமாக போராட்டத்தை தீவிரப்படுத்த உள்ளோம். எங்கள் போராட்டத்துக்கு ஆசிரியர்கள், நர்சுகள், நீதித்துறை ஊழியர்கள், டாக்டர்கள் என பல்வேறு துறையினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

போராட்டத்தின் அடுத்தக்கட்டமாக இன்று காலை அனைத்து மாவட்டங்களிலும் மறியல் நடத்தப்படும். சென்னையை பொறுத்தவரை போலீசார் எங்களை போராடவிடாமல் தடுக்கின்றனர். அரசு தரப்பில் மிரட்டலும் வருகிறது. இருப்பினும் எந்த தடை வந்தாலும் எங்கள் போராட்டம் தொடரும் என்றார். எதிர்கட்சிகள் புகார்: அரசின் முக்கிய துறைகளில் பணியாற்றும் ஊழியர்களை ஒன்றிணைந்து இன்று முதல் தீவிர போராட்டத்தில் ஈடுபடுவதால் அரசு பணிகள் முற்றிலும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆசிரியர்கள் ேபாராட்டத்தில் ஈடுபடுவதால் தொடக்கப்பள்ளிகள் நாளை இயங்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஊழியர்களின் போராட்டம் தீவிரமடையும் இந்த நிலையிலும், எதை பற்றியும் கவலைப்படாமல் பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர தமிழக அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை என திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் புகார் கூறியுள்ளன. அரிசி, சர்க்கரை, பருப்பு கிடைக்காது: சிவில் சப்ளை ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழஙக வேண்டும், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக தமிழக அரசின் தொடக்க வேளாண்மை கூட்டுறவுச்சங்கத்தின் கீழ் செயல்படும் ரேஷன் ஊழியர்களும் இன்று ஸ்டிரைக்கில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் இச்சங்கங்களின் கீழ் 15,443 ரேஷன் கடைகளில் சுமார் 12 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இவர்கள் அனைவரும் இன்று போராட்டத்தில் கலந்து கொள்கின்றனர். இதுதவிர பிற சங்கங்களை சேர்ந்த ரேஷன் ஊழியர்கள் உள்பட மொத்தம் சுமார் 30 ஆயிரம் ேரஷன் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. கோர்ட் புறக்கணிப்பு: தமிழகத்தில் உள்ள பிற துறைகளைப் போலவே நீதித் துறை ஊழியர்களும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று போராட்டத்தில் கலந்து கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளனர். அரசு மீது உள்ள எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் நீதித்துறை ஊழியர்கள் இன்று கோர்ட்டை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். ஒட்டுமொத்த அரசு துறை ஊழியர்களும் தீவிர போராட்டத்தில் குதித்துள்ளதால் இன்று முதல் தமிழகம் ஸ்தம்பித்து, அரசு நிர்வாகமே முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment