பள்ளி மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வுகளும், சட்டசபை தேர்தலும் நெருங்கி விட்டன. ஆனால், மாணவர்களுக்கான இலவச திட்டங்கள், முழுமையாக வந்து சேரவில்லை என, புகார் எழுந்துள்ளது.இதுகுறித்து, மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் கூறியதாவது:
பள்ளி மாணவர்களுக்கு, பல வகையான இலவச திட்டங்கள், அரசால் அறிவிக்கப்பட்டு உள்ளன. அடுத்த மாதம் பொதுத்தேர்வும், அதன்பின், மற்ற வகுப்புகளுக்கான தேர்வும் துவங்க உள்ளன. ஆனால், பல இலவச பொருட்கள், இன்னும் மாணவர்களுக்கு வந்து சேரவில்லை. பாடப் புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், சீருடை, சைக்கிள், லேப் - டாப் போன்றவை மட்டுமே வழங்கப்பட்டு உள்ளன. மற்ற பொருட்கள், சில வகுப்புகளுக்கு வழங்கப்பட்டு உள்ளன; பெரும்பாலானவருக்கு வழங்கப்படவில்லை. அரசின் அறிவிப்புகள் அறிவிப்புகளாகவே உள்ளன.
அதிகாரிகளும், இதை கண்டு கொள்வதில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர். மாணவர்களுக்கு இன்னும் கிடைக்காத இலவசங்கள் * மாணவர்களுக்கு வழங்கப்படும் காலணிகள், சில மாவட்டங்களில் உள்ள சில பள்ளிகளில் மட்டுமே வழங்கப்பட்டு உள்ளன * கணித உபகரணப் பெட்டியான, 'ஜியோமெட்ரிக் பாக்ஸ்' 6ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு உள்ளது * கிரயான் வண்ண பென்சில்கள், உலக வரைபடப் புத்தகமான, 'அட்லஸ்' ஆகியவை, பெரும்பாலான பள்ளிகளில் வழங்கப்படவில்லை * தலித், சிறுபான்மையின மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை, பல மாவட்டங்களில் கிடைக்கவில்லை * எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான, தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும், 12 ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும். கடந்த இரு ஆண்டுகளாக, இந்த உதவித்தொகையை பற்றி எந்த தகவலும் இல்லை.
No comments:
Post a Comment