இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Thursday, January 07, 2016

என்ஜினீயரிங் மாணவர்களுக்கு பாடத்திட்டம் மாற்றம்; கிரேடு முறையிலும் மாற்றம் கொண்டு வரப்படுகிறது


அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு அனைத்து பருவங்களிலும் பாடத்திட்டம் புதிய தொழில் நுட்பத்துடன் மாற்றப்பட்டு உள்ளது. மார்க் போடும் கிரேடு முறையிலும் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

பாடத்திட்டம் மாற்றம் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கிண்டி என்ஜினீயரிங் கல்லூரி, ஏ.சி.தொழில் நுட்ப என்ஜினீயரிங் கல்லூரி, கட்டிடக்கலை கல்லூரி, குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி. கல்லூரி ஆகிய 4 கல்லூரிகளுக்கும் பாடத்திட்டம் மாற்றி 4 வருடம் ஆகிவிட்டது. இதையொட்டி நவீன தொழில் நுட்பத்திற்கு ஏற்பவும், மேல்நாட்டில் உள்ள பாடத்திட்டத்தை பார்த்தும் அதற்கு ஏற்றபடியும் என்ஜினீயரிங் பாடத்திட்டத்தை மாற்றி அமைக்க அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டது. அதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது. ஆனால் கல்விக்குழுவின் அனுமதி பெற்ற பிறகுதான் புதிய பாடத்திட்டத்தை அமல்படுத்த முடியும்.

கல்விக்குழு கூட்டம் இந்தநிலையில் அண்ணா பல்கலைக்கழக கல்விக்குழு கூட்டம் நேற்று அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் துணை வேந்தர் பேராசிரியர் மு.ராஜாராம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் புதிய பாடத்திட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி வருகிற கல்வி ஆண்டில் இருந்து பி.இ., பி.ஆர்க். முதலாம் ஆண்டு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு 3-வது செமஸ்டர் முதல் 8-வது செமஸ்டர் வரை பாடத்திட்டம் மாற்றப்படுகிறது. தற்போது பிளஸ்-2 படிக்கும் மாணவர்களில் ஏராளமானோர் வருகிற ஆகஸ்டு மாதம் என்ஜினீயரிங் படிப்பில் சேர உள்ளனர்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள இந்த 4 கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு அனைத்து செமஸ்டர்களிலும் புதிய பாடத்திட்டம் கொண்டு வரப்படுகிறது. கிரேடு முறையில் மாற்றம் மேலும் மாணவர்கள் தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் இப்போது கிரேடு முறை உள்ளது. அந்த கிரேடு முறையிலும் மாற்றம் கொண்டு வரப்படுகிறது. ஒரு வகுப்பில் செமஸ்டர் தேர்வில் அந்த வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்கள் பெறும் சராசரி மற்றும் கூடுதல் மதிப்பெண்களை கொண்டு கிரேடு தயாரிக்கப்படும். கிரேடு முறை வகுப்புக்கு வகுப்பு மாறும். செமஸ்டருக்கு செமஸ்டர் மாறும். இந்த புதிய முறை இந்த 4 கல்லூரிகளில் மட்டும்தான் முதலில் அமல்படுத்தப்படுகிறது. இந்த கல்வி வருடம்(2015-2016) சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு அமல்படுத்தப்படுகிறது. இந்த தகவலை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மு.ராஜாராம் தெரிவித்தார்.

No comments:

Post a Comment