அரசு பள்ளி மாணவர்களுக்கு, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பாடங்களின் கற்றல் கையேட்டை, இணையதளத்தில் வெளியிட்டு, விருதுநகர், கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்ட கல்வி அதிகாரிகள் அசத்தியுள்ளனர்.அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளில் படிக்கும், கிராமப்புற ஏழை மாணவ, மாணவியர், பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறும் சதவீதம் குறைவாக உள்ளது. அவர்களுக்காக, கற்றல் கையேட்டை, தமிழக கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தயாரித்து, அரசு பள்ளிகளுக்கு இலவசமாக வழங்கியுள்ளது.
இந்த கையேடு, பல பள்ளி மாணவர்களுக்கு கிடைக்கவில்லை. எனவே, புதிய புத்தகத்துக்காக காத்திருக்காமல், திருநெல்வேலி, விருதுநகர் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட கல்வி அதிகாரிகள், தங்களுக்கென, http://www.chiefeducationalofficer.in/ என்ற ஒருங்கிணைந்த இணைய தளத்தை உருவாக்கியுள்ளனர்.இதில், ஆசிரியர்கள், பள்ளிகள் மற்றும் மாணவர்களுக்கான தகவல்களை, அவ்வப்போது பதிவேற்றம் செய்கின்றனர்.
தற்போது கற்றல் கையேட்டின், பிளஸ் 2 பாடங்களுக்கான, 'ஆன்லைன்' பிரதியை, அந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். அதேபோல், பிளஸ் 2 தேர்வுக்கான, 'ப்ளூ பிரின்ட்' அட்டவணையையும் வெளியிட்டுள்ளனர். இதனால் மாணவர்கள், இணையதளத்தில் இருந்து பிரதி எடுப்பது எளிதாகி உள்ளது.
No comments:
Post a Comment