தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் 6-ஆவது மாநில மாநாடு கோவில்பட்டியில் பிப்ரவரி 5-இல் தொடங்குகிறது. இதுகுறித்து அந்த அமைப்பின் மாநிலத் தலைவர் மோசஸ், பொது செயலாளர் பாலச்சந்தர் ஆகியோர் கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் ஆசிரியர், மாணவர்களின் நலன், கல்வி நலன், சமுதாய நலன், தேசிய நலன்களுக்காக பாடுபட்டு வரும் இந்த அமைப்பின் மாநில மாநாடு பிப்ரவரி 5, 6, 7 ஆகிய 3 நாள்கள் கோவில்பட்டி நடைபெறுகிறது. முதல் 2 நாள்கள் பிரதிநிதிகள் மாநாடும், மூன்றாம் நாள் முற்பகல் பெண் ஆசிரியர்கள் மாநாடும், பிற்பகலில் ஆசிரியர்களின் பேரணியும் நடைபெறும். தமிழகத்தின் புகழ் பெற்ற கல்வியாளர்கள், தொழிற்சங்கங்களின் தலைவர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர் இயக்கங்களின் நிர்வாகிகள், தோழமை அமைப்புகளின் நிர்வாகிகள் பேசுகின்றனர்.
தமிழகம் முழுவதிலும் இருந்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்கின்றனர். மாநாட்டின் நிறைவு நாள் நிகழ்ச்சியில், திரிபுரா மாநிலத்தின் முதல்வர் மாணிக் சர்க்கார் கலந்துகொண்டு பேசுகிறார் என்றனர்.
No comments:
Post a Comment