இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Thursday, January 07, 2016

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்புடன் 4 வருட பி.எட். படிப்பு; அடுத்த கல்வி ஆண்டு முதல் அறிமுகம்


தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்திற்கு ‘12 பி’ அந்தஸ்து கிடைத்து இருக்கிறது. இந்த சிறப்பு அந்தஸ்து கிடைத்ததற்காக முதல்-அமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த அந்தஸ்து இதுவரை 4 திறந்தநிலை பல்கலைக்கழகங்களுக்கு கிடைத்து உள்ளது. 5-வதாக தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் பெற்றிருக்கிறது. 4 மண்டல மையம் இந்த அந்தஸ்து பெற்றதனால் ‘நேக்’ என்ற தேதிய தர அங்கீகாரம் (என்ஏஏசி) பெறலாம். அதற்காக விண்ணப்பித்து இருக்கிறோம். சென்னை, கோவை, மதுரை, தர்மபுரி ஆகிய 4 இடங்களில் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்திற்கு மண்டல அளவில் மையம் ஏற்படுத்தப்பட உள்ளது. அதற்காக தமிழக அரசு ரூ.65 லட்சத்து 15 ஆயிரம் ஒதுக்கி உள்ளது.

மதுரையில் மண்டல மையம் அமைப்பதற்கான நிலத்தை கலெக்டர் வழங்கியுள்ளார். இதுபோல மற்ற இடங்களில் நிலம் கையகப்படுத்திய பின்னர் கட்டிடம் கட்டப்படும். சமுதாயக்கல்லூரிகள் அனைத்து மாவட்டங்களிலும் திறக்க இருக்கிறோம். அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். தற்போது பி.எட். தபால்வழியில் நடத்தி வருகிறோம். அடுத்த கல்வி ஆண்டு முதல் புதிய படிப்புகளை அறிமுகப்படுத்த உள்ளோம். பி.ஏ. பி.எட்., பி.எஸ்சி. பி.எட். ஆகிய இரு படிப்புகள் ஒருங்கிணைந்த 4 ஆண்டுகால படிப்பாக அடுத்த கல்வி ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்படுகிறது.

இளங்கலை பட்டத்துடன், பி.எட். படிப்பும் சேர்ந்து படிக்கக்கூடிய இதற்கு மாணவர்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருக்கும். ஆய்வுக்குழு இந்த படிப்புக்கு தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலில் விண்ணப்பித்துள்ளோம். விரைவில் ஆய்வுக்கு வர உள்ளனர். மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்கக்கூடிய ரெகுலர் பி.எட். படிப்பு, ரெகுலர் எம்.எட். படிப்பும் அடுத்த கல்வி ஆண்டில் கொண்டு வரப்படும். தபால் வழியில் பட்டயப்பிரிவில் ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள் பி.எட். படிக்கும் வகையில் அறிமுகப்படுத்த உள்ளோம். தபால் வழியில் எம்.எட். படிப்பு கொண்டுவர உள்ளோம். இவ்வாறு பேராசிரியர் சந்திரகாந்தா ஜெயபாலன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment