போதிய அடிப்படை வசதிகள் மற்றும் இடவசதி இல்லாத 746 மெட்ரிக் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யக்கோரும் வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க, 4 வாரகால அவகாசம் அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாற்றம் இந்தியா என்ற: அமைப்பின் இயக்குநர் நாராயணன் தொடர்ந்த வழக்கில், இந்த உத்தரவை தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர் கொண்ட அமர்வு பிறப்பித்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர், பள்ளிக்கல்வி முதன்மைச் செயலாளர், மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர், பள்ளிக் கல்வி இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்குநர் ஆகியோர் 4 வாரத்துக்குள் பதிலளிக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து எதிர் பதில் மனுத் தாக்கலுக்கு 2 வாரகால அவகாசம் அளித்து, வழக்கு விசாரணையை வரும் மார்ச் 7ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
No comments:
Post a Comment