பொங்கல் விடுமுறையால் ஜன.,10 முதல் ஜன.,17 வரை நடக்கவிருந்த சாலை பாதுகாப்பு வாரத்தை, ஜன.,19 வரை கடை பிடிக்க வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. போக்குவரத்து துறை சார்பில் ஆண்டுதோறும் ஜன.,1 முதல் 7 வரை சாலை பாதுகாப்பு வாரம் கடை பிடிக்கப்பட்டது. இந்தாண்டு நேற்று முதல் சாலை பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கால நீட்டிப்புதமிழகத்தில் ஜன.,15, 16, 17ல் பொங்கல் விடுமுறை உள்ளதால் சாலை பாதுகாப்பு வாரத்தை ஜன.,19 வரை கடை பிடிக்க வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
முதல் நாளான நேற்று மாவட்ட தலைநகர்களில் சாலை பாதுகாப்பு கண்காட்சி திறக்கப்பட்டு, ஊர்வலங்கள் நடத்தப்பட்டன. 2ம் நாளான இன்று சுங்க சாவடிகளில் சாலை பாதுகாப்பு சம்பந்தமான சிறப்பு இரவு வாகன தணிக்கை, வாகனங்களின் பின்புறத்தில் சிவப்பு 'ரிப்ளெக்டர்' ஸ்டிக்கர் ஒட்டுதல் என,சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. போட்டிகள்ஜன.,12ல் பள்ளி மாணவர்களிடையே சிறந்த சாலை பாதுகாப்பு வசனம் எழுதும் போட்டி போன்றவை நடத்தி பரிசு வழங்குதல், ஜன.,13ல் ஹெல்மெட் அணிவதன் அவசியம் பற்றி விழிப்புணர்வு ஊர்வலம், ஜன.,14ல் அதிவேகம் போன்ற விதி மீறல்கள் குறித்த சோதனை செய்யப்படுகிறது.
ஜன.,18ல் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மூலம் டிரைவர்களுக்கு மருத்துவ முகாம், முதலுதவி பயிற்சி முகாம், ஜன.,19ல் சாலை பாதுகாப்பு வாசகங்கள் அடங்கிய உறுதி மொழி எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment