வாக்காளர் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்ட 16.18 லட்சம் வாக்காளருக்கு இன்று முதல் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படுகிறது. தேர்தல் ஆணையம் ஆண்டுதோறும் வாக்காளர் பட்டியலை வெளியிட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த 20ம் தேதி வெளியிடப்பட்டது. அதில் தமிழக மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5 கோடியே 79 லட்சத்து 72 ஆயிரத்து 690 ஆக இருந்தது. கடந்த ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியலில் வெளியிட்டபோது தமிழகத்தில் 5,62,06,547 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அதாவது, புதிதாக 16,18,526 பேர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு தேசிய வாக்காளர் தினமான இன்று முதல் அடையாள அட்டை வழங்கும் பணி தொடங்குகிறது. புதிய வாக்காளர்களுக்கு ஆளுநர் ரோசையா வாக்காளர் அடையாள அட்டையை வழங்கி தொடங்கி வைக்கிறார். மேலும் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் மூலம் அவரவர் வீடுகளுக்கே நேரில் வந்து புதிய வாக்காளர் அட்டை வழங்கவும் தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment