தமிழகத்தில், புதிதாக வாக்காளர் பட்டியலில் இணைந்தவர்களுக்கு, ஓட்டு போடுவது எப்படி என்பது தொடர்பான, கார்ட்டூன் புத்தகத்தை வழங்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சட்டசபை தேர்தலுக்கான ஏற்பாடுகளில், தமிழக தேர்தல் ஆணையம் தீவிரமாக உள்ளது. கடந்த, 20ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. மாநிலம் முழுவதும், 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் புதிய வாக்காளர்களாக இணைந்துள்ளனர்.
சட்டசபை தேர்தலில், முதல் ஓட்டை அவர்கள் பதிவு செய்ய இருப்பதால், தயக்கம், தடுமாற்றமின்றி ஓட்டு போடும் வகையில், கார்ட்டூன் வடிவிலான புத்தகம் ஒன்றை, தேர்தல் ஆணையம் தயாரித்துள்ளது. அதில், மின்னணு ஓட்டு இயந்திரத்தில் குழந்தைகள் ஓட்டை பதிவு செய்வது போலான புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. தற்போது, ஒவ்வொரு மாவட்டத்துக்கும் இந்த புத்தகம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதை நகல் எடுத்து, புதிய வாக்காளர்களுக்கு நேரடியாக வழங்க வேண்டும் என, தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.
No comments:
Post a Comment