வரும், 15ம் தேதி காமராஜர் பிறந்த நாளில், கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடுவது குறித்து அதிகாரப்பூர்வ உத்தரவு வராமல், அரசு பள்ளிகள் குழப்பம் அடைந்துள்ளன. தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்த நாளான, ஜூலை, 15ம் தேதி, 'கல்வி வளர்ச்சி நாள்' என, கடந்த தி.மு.க., ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. ஆனால், அ.தி.மு.க., ஆட்சியில், கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடுவதில் குழப்பம் ஏற்பட்டு வருகிறது.
இதுகுறித்து, அரசு பள்ளி ஆசிரியர் சிலர் கூறியதாவது:காமராஜர் பிறந்த நாளுக்கு இன்னும், சில நாட்களே உள்ளன. கல்வி வளர்ச்சி நாளை ஒட்டி, மாணவ, மாணவியருக்கு பேச்சு, கவிதை, கட்டுரைப் போட்டி நடத்த, குறைந்தது, 10 நாட்களுக்கு முன் பயிற்சி அளிக்க வேண்டும். ஆனால், உத்தரவு வராததால், இன்னும் போட்டிகளை துவங்கவில்லை. தனியார் பள்ளிகளில் போட்டிகளை நடத்த பயிற்சி அளித்து வருகின்றனர்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment