இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, March 24, 2015

மாணவர்களை குழப்பும் இரட்டை கல்வி முறை

மாணவர்களை குழப்பும் இரட்டை கல்வி முறை: தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஏபிஎல் என்ற செயல்முறை அடிப்படை கற்றல் முறை உள்ளது. பாடம் தொடர்பான அட்டைகளை வைத்துக்  கொண்டு பாடம் நடத்த வேண்டும். அத்துடன் புத்தகங்களையும் வைத்துக் கொண்டு பாடம் நடத்த வேண்டும் என இரண்டு முறைகளை ஆசிரியர்கள் மீது  கல்வித்துறை திணித்துள்ளது. இதனால், மாணவர்கள் சில நேரங்களில் குழம்பி விடுகின்றனர். ஆசிரியர்கள் என்னதான் விரிவாகவும் புரியும்படியும் பாடங்களை  நடத்தினாலும், இந்த இரட்டை முறைகாரணமாக மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.

தத்தளிக்கும் தற்காலிக ஆசிரியர்கள்:பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் நியமிக்கப்படும் தற்காலிக ஆசிரியர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.5000 முதல் ரூ.7000 வரை தொகுப்பூதியம் வழங்குகின்றனர்.  ஆனால் அதையும் மாதாமாதம் கொடுப்பதில்லை. 6 மாதத்துக்கு ஒரு முறை கொடுக்கின்றனர். இதனால் பகுதி நேர ஆசிரியர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இருதலைகொள்ளி எறும்பு: அரசு பள்ளிகளிகளில் பருவத் தேர்வு நடைபெறும் நேரங்களில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் எடுக்க கூட நேரம் கிடைப்பதில்லை. அவர்களை  மத்திய, மாநில திட்டங்களான தேர்தல் பணி, வாக்காளர் கணக்கெடுப்பு பணி, மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி, ஆதார் அட்டை வழங்கும் பணிக்கு  ஈடுபடுத்தப்படுகின்றனர். இதனால், மாணவர்களிடையே படிப்பில் ஒருவித பிடிப்பின்மை ஏற்படுகிறது. இதற்கு வழங்கும் ஊதியமும் குறைவு. இந்த பட்டியல்  பணியின்போது சிறிய தவறுகள் ஏற்பட்டாலும் தண்டனை கிடைக்கிறது. இதனால் ஆசிரியர்கள் இருதலை கொள்ளி எறும்புகளாக திணறுகின்றனர்.

பணி பாதுகாப்பு அம்பேல்: ஒரு சினிமாவில் வரும் வசனம் இது. அதோ போறானே.. அவனை ஈசியா அடிக்கலாம். ஏண்டா அப்படிச் சொல்ற..ஏன்னா.. அவன் டீச்சரா இருக்கான். அவனை  அடிச்சா திருப்பி அடிக்க மாட்டான்’’ என்று அந்த கதாபாத்திரம் பதில் சொல்லும்.அந்த நிலைதான் இன்று தமிழகத்தில் இருக்கிறது. நன்றாக படிக்காத  மாணவனை கண்டித்தால், அவன் தந்தையுடன் ஒரு ரவுடி பட்டாளத்தையே அழைத்து வந்து ஆசிரியரை துவம்சம் செய்து விட்டு செல்கிறான். படிக்கச் சொல்லி  அடித்தால், மனித உரிமை கமிஷனுக்கு செல்கிறார்கள். பெண் ஆசிரியைகளை, மாணவர்களே கேலி செய்யும் நிலை உள்ளது. சமீபத்தில் கூட பூந்தமல்லியில்  ஒரு பெண் ஆசிரியையை பள்ளி மாணவன் ஒருவன் கம்ப்யூட்டர் வகுப்பில் அடித்துள்ளான். பிரச்னை பத்திரிகையில் வந்து பெரிதான பிறகு அவன் பள்ளியில்  இருந்து துரத்தப்பட்டான். அதுவரை அந்த பெண் ஆசிரியை பட்ட அவஸ்தைக்கு என்ன விலையை தரப்போகிறது அரசு. விடைக்கு உரிய மதிப்பெண் அளித்தால்  கூட, குறைவான மதிப்பெண் அளிக்கிறாயா என்று ஆசிரியரை அடிக்கும் நிலைதான் உள்ளது.

மற்ற பிரச்னைகள்: 8ம் வகுப்பு வரை ஆல் பாஸ் முறை உள்ளதால் மாணவர்களை படிக்க வேண்டும் என்று ஆசிரியர் கட்டாயப்படுத்த முடியாது. அதனால் மாணவர்கள் அடிப்படைக்  கல்வியை எப்படி பெற முடியும்.

கெஞ்சி கூத்தாடும் ஆசிரியர்கள்: ஓசோன் பாதுகாப்பு தினம், ஆசிரியர் தினம், சுதந்திர தினம், உலக சுற்றுச் சூழல் தினம் என்று பள்ளிகளில் கொண்டாடப்படுகிறது. தற்போது அதையும் கடந்து  மின்சார சிக்கனம், டெங்கு விழிப்புணர்வு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் குறித்தும் ஆசிரியர்கள் பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த  வேண்டும். அதற்காக துண்டு நோட்டீஸ், பேனர் மற்றும் பதாகைகள் தயாரிக்க வேண்டும். போலீஸ் பர்மிஷன் உள்ளிட்டவற்றிற்காக ஒரு கணிசமான பணத்தை  அரசு தரவேண்டும். ஆனால், பல ஆசிரியர்கள் தங்கள் சொந்த பணத்திலும், சிலர் வியாபாரிகளிடம் சென்று கெஞ்சி கூத்தாடி பணத்தை பெற்று விழிப்புணர்வு  நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்கின்றனர்.

No comments:

Post a Comment