ஆதார் விவரத்தைத் தெரிவிக்க... ஆதார் விவரங்களை வாக்காளர் பட்டியலுடன் இணைப்பதற்கு வசதியாக, ஆதார் எண்ணைத் தெரிவிக்க வேண்டியது அவசியமாகும்.
அதேசமயம், ஆதார் எண் இருந்தால்தான் வாக்களிக்க முடியும் என்பது கட்டாயமில்லை. ஆதார் எண்ணை தேர்தல் ஆணைய இணையதளத்தின் மூலமும், 51969 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தியாகவும், மின்னஞ்சல், செல்லிடப்பேசி அப்ளிகேஷன், 1950 என்ற எண்ணுக்கு தொலைபேசி வழியாகவும் தெரிவிக்கலாம். மேலும், சிறப்பு முகாம்களில் அளிக்கப்படும் தனியான விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்தும் கொடுக்கலாம் என சந்தீப் சக்சேனா தெரிவித்தார்.
ஆதார் இல்லாவிட்டால்... வாக்காளர் பட்டியலை பிழையின்றி செம்மைப்படுத்தவே ஆதார் விவரங்களைப் பெற்று வாக்காளர் பட்டியலில் இணைக்கும் முயற்சியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. அதேசமயம், ஆதார் எண் இருந்தால்தான் வாக்களிக்க முடியும் என்று கட்டாயப்படுத்தவில்லை எனவும் விளக்கமளித்துள்ளது. வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தி, விவரங்களை உறுதிப்படுத்தும் திட்டத்தின் கீழ், வாக்காளர்கள் அனைவரும் ஆதார் எண்ணைக் குறிப்பிட தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா கூறியதாவது:
தமிழகத்தில் 50 சதவீதம் பேர் ஆதார் எண்ணைப் பெற்றுள்ளனர். எனவே, அந்த விவரங்களை தேர்தல் ஆணையம் பெற்று அப்படியே சேர்த்துக் கொள்ளும். அதேசமயம், மற்றவர்களும் ஆதார் எண்ணைப் பெறுவதற்கு ஊக்குவிக்கப்படுவர். வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியுடன் இந்தப் பணியையும் ஒருங்கிணைத்துச் செயல்பட மாவட்ட நிர்வாகங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. ஆதார் இல்லாவிட்டாலும், தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் பெரும்பாலான மக்களின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்த விவரங்களைப் பெற தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என்றார் அவர்.
No comments:
Post a Comment