தொடக்கப் பள்ளிகளில் படிப்போரில் 1 முதல் 3ம் வகுப்பு வரையும், 4, 5ம் வகுப்புகளுக்கும் அடிக்கடி சிறிய அளவில் போட்டிகள் வைப்பார்கள். இந்த போட்டிகள் அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் நடத்தப்படுகிறது. இந்த போட்டிகளில் வெற்றி பெறும் குழந்தைகளுக்கு பரிசு வழங்க ரூ. 300 ஒரு பள்ளிக்கு ஒதுக்கப்படுகிறது. முதல் பரிசு ரூ.70, இரண்டாம் பரிசு ரூ.50, மூன்றாம் பரிசு ரூ.30 என அந்த பணத்தை பிரித்து பரிசாக வழங்க வேண்டும். இதில் என்ன கொடுமை என்றால் அந்த பரிசுத் தொகையை காசோலையாக கொடுத்து கையெழுத்தும் வாங்குகின்றனர். ரூ.30க்கு காசோலை பெற்றுக் கொள்ளும் ஒரு குழந்தை அதை மாற்றிக் கொள்ள அருகில் உள்ள வங்கிக்கு செல்ல வேண்டும். இதற்கு ரூ.100 செலவு செய்தால் தான் ரூ.30 பெற முடியும். இந்த திட்டத்தை தமிழகம் முழுவதும் செயல்படுத்த அனைவருக்கும் கல்வி இயக்கம் ரூ.3 கோடி ஒதுக்கியுள்ளது. எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க
No comments:
Post a Comment