் தொடக்கக் கல்வி ஆசிரியர் டிப்ளமோ படிப்புக்கான கலந்தாய்வு அட்டவணையை மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது. தொடக்கக் கல்வி ஆசிரியர் டிப்ளமோ படிப்பில் அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 2,800 இடங்களும், அரசு உதவி பெறும் மற்றும் தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான இடங்களும் உள்ளன. இந்த இடங்களில் சேர 4,520 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் 464 மாணவர்கள், 4,056 மாணவியர் ஆவர். இந்தப் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வு ஜூலை 7 முதல் 12-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
விண்ணப்பித்துள்ள மாணவ, மாணவியரின் மதிப்பெண் அடிப்படையில் தர வரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். கலந்தாய்வு நடைபெறும் இடம், நாள் மற்றும் நேரம் ஆகிய விவரங்கள் அடங்கிய அழைப்புக் கடிதங்கள் விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. கடிதங்கள் கிடைக்கப் பெறாதவர்கள் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் www.tnscert.org என்ற இணையதளத்திலிருந்து அழைப்புக் கடிதங்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து அழைப்புக் கடிதங்களைப் பதிவிறக்கம் செய்யலாம். கலந்தாய்வுக்கு வரும் மாணவ, மாணவியர் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ்களும், மாற்றுத் திறனாளிகள், சுதந்திரப் போராட்ட தியாகிகளின் பேரன், பேத்திகள், முன்னாள் ராணுவத்தினரின் மகன், மகள் போன்றவர்கள் அதற்கான சான்றிதழ்களை எடுத்துவர வேண்டும்.
No comments:
Post a Comment