பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிக்கூடங்களுக்கும் முதன்மை கல்வி அதிகாரிகள் வழியாக ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
* பள்ளிக்கூடங்களில் சாதி, மத, சமய , இன வேறுபாட்டு உணர்வுக்கு இடம் அளிக்காமல் கல்வி கற்பிக்க ஆசிரியர்களும் பெற்றோர்களும் முன்வரவேண்டும்.
பஸ் படிக்கட்டில் பயணிக்க வேண்டாம்
* ஓடும் பஸ்களில் படிக்கட்டில் பயணம் செய்வதால் உடல் உறுப்புகள் இழப்பு மற்றும் உயிரிழப்பு ஏற்படுகிறது. எனவே மாணவர்கள் அனைவரும் பஸ் படிக்கட்டில் பயணம் செய்யக்கூடாது. இதை ஆசிரியர்கள் இறை வணக்க நேரத்தில் மாணவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்.
*மாணவர்கள் சிறுவர்களாக இருந்தால் பள்ளிக்கு அருகில் சாலைகளை சிறுவர்கள் பாதுகாப்பாக கடக்க ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஆசிரியரை நியமிக்க வேண்டும்.
*பள்ளிக்கூடத்திற்கு அருகில் வேகத்தடை இருக்கிறதா? என்று ஆசிரியர்கள் உறுதி செய்யவேண்டும். இல்லை என்றால் உடனே வேகத்தடை அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
பள்ளிகளுக்கு மோட்டார் சைக்கிள் ஓட்டி வரக்கூடாது
* பள்ளிக்கூடங்களுக்கு மாணவர்கள் மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டி ஒட்டிவரக்கூடாது. அவ்வாறு ஓட்டி வரும் மாணவ-மாணவிகளை பள்ளிக்கூடங்களுக்குள் அனுமதிக்கக்கூடாது.
இதுகுறித்து தலைமை ஆசிரியர் சம்பந்தப்பட்ட மாணவரின் பெற்றோரை அழைத்து உங்கள் மகனை, பள்ளிக்கு மோட்டார் சைக்கிளில் வர அனுமதிக்காதீர்கள் என்று சொல்ல வேண்டும். மீறி வந்தால் மாணவர்களை கடுமையாக எச்சரிக்கை செய்ய வேண்டும்.
அவர்கள் பள்ளிக்கு வரும்போது அல்லது பள்ளியில் இருந்து வீட்டுக்கு போகும்போது இரு சக்கர வாகனத்தில் சென்று ஏதாவது விபத்தில் சிக்கி உயிர்ப்பலியானால் இதற்கு சம்பந்தப்பட்ட பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்தான் பொறுப்பு ஆவார்.
இவ்வாறு இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் அந்த சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment