இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, July 30, 2014

புதிய ஆசிரியர் பணியிடங்கள் அறிவிப்பு

தமிழகத்தில் புதிதாக ஆயிரத்து 382 ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். மேலும், தாய், தந்தையை இழந்த மாணவர்களின் கல்விக்காக வைப்பீடு செய்யப்படும் நிதியானது ரூ.50 ஆயிரத்திலிருந்து ரூ.75 ஆயிரமாக உயர்த்தப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

     இதுகுறித்து, சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்புகள்:

       நடப்புக் கல்வியாண்டில் 25 மாவட்டங்களில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் அதிகமுள்ள 128 குடியிருப்புப் பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளுக்கு தலா ஒரு தொடக்கப்பள்ளி வீதம் 128 பள்ளிகள் தொடங்கப்படும். இதற்கென 256 ஆசிரியர்கள் (ஒரு தலைமை ஆசிரியர், ஒரு இடைநிலை ஆசிரியர்) நியமிக்கப்படுவர். இந்தப் பள்ளிகளுக்கு உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்.

       இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி மூன்று கிலோமீட்டருக்கு ஒரு நடுநிலைப் பள்ளி அவசியம். அதன்படி, பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு வருகின்றன. நடப்பாண்டில் 19 மாவட்டங்களில் 42 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்படும். இதற்கென 126 ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும்.

       மேலும், நடப்பு கல்வியாண்டில் 50 அரசு நடுநிலைப் பள்ளிகள் உயர் நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்படும். இந்தப் பள்ளிகளுக்கென 50 தலைமை ஆசிரியர்கள், 250 பட்டதாரி ஆசிரியர்கள் என மொத்தம் 300 ஆசிரியர் பணியிடங்கள் பணி நிரவல் மூலம் நிரப்பப்படும்.

   ஆயிரம் பணியிடங்கள்: கடந்த மூன்று ஆண்டுகளில் 300 அரசு, மாநகராட்சி, நகராட்சி உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன. நடப்பு கல்வியாண்டில் 100 பள்ளிகள் அதுபோன்ற தரம் உயர்த்தப்படுகின்றன. இதற்கென 900 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும், 100 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் என மொத்தம் ஆயிரம் பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும்.

      வருவாய் ஈட்டும் தாய் அல்லது தந்தை விபத்தில் இறந்தாலோ, நிரந்தர முடக்கம் அடைந்தாலோ அவர்களின் குழந்தைகள் கல்வியை தொடர்ந்து கற்கும் வகையில், ரூ.50 ஆயிரம் வைப்பீடாக வைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் தொகை ரூ.75 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். அதிலிருந்து கிடைக்கும் வட்டித் தொகை மற்றும் அதன் முதிர்வுத் தொகை மாணவ-மாணவியரின் கல்விச் செலவு, பராமரிப்புக்காக பயன்படுத்தப்படும்.

       கழிவறைகள் பராமரிப்பு: தமிழகத்தில் கழிவறைகள் இல்லாத 2 ஆயிரத்து 57 பள்ளிகளுக்கு கழிவறை வசதிகள் செய்யப்பட்டன. இந்தக் கழிவறைகளை பராமரிக்க ரூ.160.77 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இதனால், 56 லட்சத்து 5 ஆயிரம் மாணவ, மாணவியர் பயன் பெறுவர் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment