ு. பள்ளிக் கல்வி அமைச்சர் கே.சி.வீரமணி, பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.சபிதா ஆகியோர் தலைமையில் மண்டல வாரியான ஆய்வுக் கூட்டங்கள் திருவள்ளூர், விழுப்புரம், கோவை, புதுக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் ஆகஸ்ட் 13 முதல் செப்டம்பர் 1 வரை நடைபெற உள்ளன. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் 70 சதவீதத்துக்கும் குறைவான தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் அனைவரும் இந்தக் கூட்டங்களில் பங்கேற்பதை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் உறுதிசெய்ய வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் எடுத்த நடவடிக்கைகள் தொடர்பாகவும் இந்தக் கூட்டத்தில் ஆய்வு நடத்தப்பட உள்ளது. இந்த ஆண்டு முதல் முறையாக பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வுகளில் தேர்ச்சி விகிதம் 90 சதவீதத்தைக் கடந்தது. பத்தாம் வகுப்பில் 90.7 சதவீதமும், பிளஸ் 2 வகுப்பில் 90.6 சதவீதமும் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். அரசுப் பள்ளிகளில் 80 சதவீதத்துக்கு அதிகமான மாணவர்களும், தனியார் பள்ளிகளில் 97 சதவீதத்துக்கும் அதிகமான மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர்.
கடந்த ஆண்டு இதேபோன்ற மண்டல ஆய்வுக் கூட்டத்துக்குப் பிறகுதான் அரசுப் பள்ளி மாணவர்கள் பொதுத்தேர்வுகளில் குறைந்தபட்சம் தேர்ச்சி பெறுவதற்கான வழிகாட்டி கையேடுகள் தயாரித்து வழங்கப்பட்டன. இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் உயர்ந்ததற்கு இந்தக் கையேடுகளும் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆங்கில வழிப் பிரிவுகள், தமிழ் கற்றல் சட்டம்: 2014-15 ஆம் ஆண்டில் ஆங்கில வழிப் பிரிவுகள் தொடங்கப்பட்ட பள்ளிகளின் எண்ணிக்கை விவரம், கட்டாய தமிழ் கற்றல் சட்டத்தைச் செயல்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விவரம், பள்ளிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு போன்றவை குறித்தும் இந்தக் கூட்டங்களில் ஆய்வு நடத்தப்பட உள்ளது. அதோடு பள்ளிகளில் உள்ள குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, மாணவர்களுக்காக செயல்படுத்தப்படும் பல்வேறு நலத்திட்டங்கள் உள்ளிட்டவை தொடர்பாகவும் மண்டல கூட்டங்களில் ஆய்வு நடத்தப்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment