வருங்கால வைப்பு நிதி (பி.எப்.) சந்தாதாரர்களுக்கு நிரந்தர பொதுக் கணக்கு எண் வழங்கும் திட்டம் விரைவில் அமல்படுத்தப்படவுள்ளதாக சென்னை மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர் எஸ்.டி.பிரசாத் தெரிவித்தார். இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம், பி.எப். சந்தாதாரர்களுக்கு பொது கணக்கு எண்(மய்ண்ஸ்ங்ழ்ள்ஹப் அஸ்ரீஸ்ரீர்ன்ய்ற் சன்ம்க்ஷங்ழ்) வழங்க திட்டமிட்டுள்ளது. இதற்கான சாப்ட்வேர் புரோகிராம் தலைமை அலுவலகத்திலிருந்து, அனைத்து மண்டல மற்றும் துணை அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
அதன்பிறகு ஒவ்வொரு தொழிலாளிக்கும் தனித்துவம் வாய்ந்த பொது கணக்கு எண் பிரத்யேகமாக வழங்கப்படும். ஒரு தொழிலாளர் ஒரு நிறுவனத்திலிருந்து மற்றொரு நிறுவனத்துக்கு மாறும்போது புதிதாக பி.எப். எண் வழங்கப்படமாட்டாது. இந்தப் பொது கணக்கு எண் ஒவ்வொரு தொழிலாளிக்கும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தால் ஒரு முறை உருவாக்கப்படும். பொது கணக்கு எண் பெறுவதற்கு தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ரசீது, ஆதார் அடையாள அட்டை, நிரந்தர கணக்கு எண்(பான் கார்டு), வங்கி கணக்கு எண், பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை தங்கள் நிறுவனத்தில் அளிக்க வேண்டும்.
நிறுவனங்கள் அந்த விவரங்களை வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் இணைய தளத்தில் பதிவு செய்வதன் மூலம் பொது கணக்கு எண் உருவாக்கப்படும் என ஆணையர் எஸ்.டி.பிரசாத் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment