திருப்பூரில் என்ஜினீயரிங் கலந்தாய்வுக்கான விண்ணப்பங்கள் நேற்று வழங்கப்பட்டன. மாணவர்கள் நீண்ட வரிசையில் நின்று விண் ணப்பங்களை வாங்கி சென்றனர். விண்ணப்பங்கள் வினியோகம் தமிழ்நாட்டில் உள்ள கல்லூ ரிகளில் என்ஜினீயரிங் படிப் புக்கான இளநிலை பொறியி யல் கலந்தாய்வு விண்ணப் பங்கள் மாணவர்களுக்கு நேற்று முதல் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. திருப்பூர் பல்லடம் ரோட் டில் உள்ள எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கலைக் கல்லூரியின் 2-வது நுழைவுவாயிலில் பி.இ. கலந்தாய்வுக்கான விண் ணப்ப வினியோக மையம் அமைக்கப்பட்டுள்ளது.
நேற்று காலை 9.30 மணி முதல் விண்ணப்பங்கள் வழங் கப்படும் என அறிவிக்கப்பட்டி ருந்தது. 20-ந்தேதி வரை இதைத்தொடர்ந்து நேற்று காலை 7 மணிக்கே மாணவர் கள் எல்.ஆர்.ஜி. கல்லூரியில் குவிந்தனர். 10 மணி முதல் விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்டது. மாணவர்கள் விண்ணப்பங்களை நீண்ட வரிசையில் நின்று வாங்கி சென்றனர். முதல் கட்டமாக மையத் துக்கு 3 ஆயிரம் விண்ணப் பங்கள் வந்திருந்தன. நேற்று ஒரே நாளில் 700-க்கும் மேற் பட்ட விண்ணப்பங்கள் விற்று தீர்ந்தது. இதில் எஸ்.சி. மற்றும் எஸ்.டி. வகுப்பை சேர்ந்தவர் களுக்கு ரூ.250 -க்கும், பி.சி. வகுப்பை சேர்ந்தவர்களுக்கு ரூ.500-க்கும் விண்ணப்பம் வினியோகம் செய்யப்பட்டது. வருகிற 20-ந்தேதி வரை விண் ணப்பங்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment