தமிழகம் முழுவதும் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் டிப்ளமோ படிப்புகளில் சேருவதற்கு திங்கள்கிழமை (மே 5) முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளன. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மே 23 மாலை 5.45 மணிக்குள் சம்பந்தப்பட்ட பாலிடெக்னிக் கல்லூரி முதல்வருக்குச் சென்றடையுமாறு அனுப்ப வேண்டும். பிளஸ் 2 முடித்த மாணவர்கள் பாலிடெக்னிக் கல்லூரிகளில் நேரடி இரண்டாமாண்டு படிப்புகளில் சேரலாம். பத்தாம் வகுப்புக்குப் பிறகு 2 ஆண்டு ஐடிஐ படிப்பு முடித்த மாணவர்களும் நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேரலாம்.
இதற்கான விண்ணப்பங்களை அந்தந்த பாலிடெக்னிக் கல்லூரிகளில் பெற்றுக்கொள்ளலாம். நேரிலும், அஞ்சல் மூலமாகவும், இணையதளத்தில் இருந்தும் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்யலாம். நேரில் விண்ணப்பம் பெற விரும்புவோர் ரூ.150 செலுத்தியும், அஞ்சல் மூலம் பெற விரும்புவோர் ரூ.150லிக்கான கேட்பு வரைவோலை எடுத்து, சுய விலாசமிட்ட அஞ்சல் உறையில், ரூ.15லிக்கான அஞ்சல் வில்லையை அனுப்பி பெற்றுக்கொள்ளலாம். தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் www.tndte.com என்ற இணையதளத்திலிருந்தும் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்யலாம். தமிழகம் முழுவதும் 32 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளும், 4 அரசு பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரிகளும், சிறப்புப் பயிலகங்களும் உள்ளன.
No comments:
Post a Comment