அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஜூன் 18ம் தேதி வகுப்புகள் தொடங்கப்படும் என்று கல்லூரி கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது. இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் நேற்று முதல் வழங்கப்பட்டு வருகிறது. மருத்துவக் கல்லூரிக்கான விண்ணப்பங்கள் அடுத்த வாரம் வினியோகம் செய்யப்பட உள்ளது. அதே போல் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் அடுத்த வாரம் தொடங்கி மே 20ம் தேதி வரை வினியோகிக்கப்படுகிறது.
கோடை விடுமுறைக்கு பின்னர் அனைத்து கலை கல்லூரிகளிலும் ஜூன் 18ம் தேதி வகுப்புகள் தொடங்கப்படும் என்று கல்லூரி இயக்குனரகம் அறிவித்துள்ளது. அதன்படி, 2ம் ஆண்டு மற்றும் 3ம் ஆண்டு வகுப்புகள் ஜூன் 18ம் தேதி தொடங்கும். ஜூன் மாதம் தான் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை தொடங்கும். ஜூலை அல்லது ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கும் என கல்லூரி கல்வி இயக்குனரக அதிகாரிகள் கூறினர்.
No comments:
Post a Comment