வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான விண்ணப்பங்களை அளிக்கலாம் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை அவர் கூறுகையில், மக்களவைத் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் அதற்கான உரிய படிவங்களை வட்டாட்சியர் அலுவலகங்கள் அல்லது மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் பெற்று பூர்த்தி செய்து அளிக்கலாம்.
இந்தப் படிவங்கள் பெறப்பட்டு, 45 நாள்களுக்குள் அவற்றின்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, பின்னர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படும். மக்களவைத் தேர்தல் நேரத்தில் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர்களைச் சேர்த்தவர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படாமல் இருந்தது. அவர்களுக்கு அடையாள அட்டைகள் விரைவில் வழங்கப்படும்.
மேலும், இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படும். அப்போதும் பட்டியலில் பெயர்களைச் சேர்க்க படிவங்களை அளிக்கலாம் என்றார்.
No comments:
Post a Comment