அரசு ஊழியர்கள் விடுமுறை நாட்களை குறைக்க கோரிய வழக்கில் உத்தரவை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.திருச்சி, வயலு£ரை சேர்ந்தவர் இளமுகில். ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொது நல மனு:அரசு ஊழியர்களுக்கு குடியரசு தினம், சுதந்திர தினம் மற்றும் காந்தி ஜெயந்திக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இதோடு சனி மற்றும்
ஞாயிற்று கிழமைகளில் வார விடுமுறையாக 104 நாட்களும், மத்திய, மாநில அரசு விடுமுறை, மருத்துவ விடுப்பு உள்ளிட்ட 164 நாட்கள் விடுமுறையாக கிடைக்கிறது. ஆண்டில் 196 நாட்கள் மட்டுமே வேலை பார்க்கின்றனர். பள்ளிகளில் 230 நாட்கள் வரை வேலைபார்க்கிறார்கள்.இதோடு தேர்தல் காலங்களில் தேர்தல் பணிகளில் அரசு ஊழியர்கள் ஈடுபடுகின்றனர்.
இதனால் பொதுமக்களின் மனுக்கள் அரசு அலுவலகங்களில் ஆண்டுகணக்கில் தேங்குகின்றன. அரசு ஊழியர்களால் மக்கள் பணியாற்ற முடியாமல் போகிறது. சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் என்பது மேற்கத்திய நாடுகளின் வழக்கம். அங்கு மக்களும் குறைவு, மக்கள் பிரச்னையும் குறைவு. இதனால் உடனுக்குடன் பிரச்னைகள் தீர்க்கப்படும்.பட்டா மனுக்கள் லட்சக்கணக்கில் நிலுவையில் உள்ளன. ஓட்டுநர் உரிமம், கட்டிட வரைபட அனுமதி, மின்சார இணைப்புகள், ஓய்வூதியம், கருணை வேலை மனுக்கள் உள்ளிட்டவை ஆண்டு கணக்கில் நிலுவையில் உள்ளன. மத்திய ஊதிய குழு கடந்த 24.3.2008ல் ஓர் அறிக்கையை அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. அதில், தேசிய விடுமுறை நாட்களை தவிர மற்ற நாட்களில் அரசு அலுவலகங்கள் திறந்திருக்க வேண்டும். அரசிதழில் வெளியிடப்பட்ட விடுமுறை நாட்களை குறைக்க வேண்டும். விழாக்காலங்களில் மற்ற மதத்தினரும், விருப்பமுள்ளவர்களும் பணிக்கு வரலாம் என்று கூறியுள்ளனர்.
இந்த பரிந்துரைகளை அமல்படுத்தவில்லை.சனிக்கிழமையை வேலை நாளாக அறிவிக்க வேண்டும். அப்படி செய்தால் மக்கள் குறைகளை விரைவாக தீர்க்க முடியும். இதுகுறித்து சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தேன். எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்களை குறைந்தது 2 நாளாகவும், அதிகபட்சம் 8 நாளாகவும் மாற்ற வேண்டும். அரசிதழில் வெளியிட்ட 18 நாள் விடுமுறையை ரத்து செய்ய வேண்டும். ஞாயிறு மற்றும் தேசிய விடுமுறை நாட்களை தவிர மற்ற நாட்களில் அரசு அலுவலகங்கள் திறந்திருக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.இந்த மனு நேற்று நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.வைத்தியநாதன் பெஞ்ச் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனு மீதான விசாரணையை நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
No comments:
Post a Comment