எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு கடந்த 23–ந்தேதி வெளியானது. 10 லட்சத்து 20 ஆயிரம் பேர் தேர்வு எழுதியதில் 9 லட்சத்து 26 ஆயிரத்து 138 மாணவ–மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். கடந்த ஆண்டை காட்டிலும் இந்த வருடம் மாணவ–மாணவிகள் மதிப்பெண்களை வாரி குவித்தனர்.
499 முதல் மதிப்பெண்ணை 19 மாணவ– மாணவிகள் பெற்று மாநில அளவில் சாதனை படைத்தனர். தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவ–மாணவிகளுக்கும் மதிப்பெண் சான்றிதழ் அந்தந்த பள்ளிகளில் வினியோகம் செய்யப்படும். 10 லட்சம் மதிப்பெண் சான்றிதழ்கள் பிழையின்றி தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மாணவ–மாணவிகள் பெற்ற மதிப்பெண்கள் தவறு இல்லாமல் பிறந்த தேதி, பெயர், பள்ளியின் பெயர் மற்றும் மாணவரின் புகைப்படம் போன்றவற்றில் எந்த பிழையும் இல்லாமல் பிரிண்ட் செய்யப்படுகிறது.
தற்போது மதிப்பெண் பட்டியல் ஸ்கேனிங் செய்யும் வேலை நடைபெற்று வருகிறது. ஜூன் முதல் வாரத்தில் மதிப்பெண் சான்றிதழ் வினியோகம் செய்யப்படுகிறது.
இதுகுறித்து அரசு தேர்வு துறை இயக்குனர் தேவராஜன் கூறும் போது:–
எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண் சான்றிதழ் ஸ்கேனிங் செய்யும் பணி நடந்து வருகிறது. மதிப்பெண் பட்டியலில் சிறு தவறும் ஏற்படாமல் பிரிண்ட் செய்து கொடுக்க முழு கவனத்துடன் ஊழியர்கள் பணியில் ஈடுபட்டு உள்ளனர். ஜூன் முதல் வாரத்தில் மதிப்பெண் சான்றிதழ் பள்ளிகளில் வழங்க அனைத்து பணிகளும் முழுவீச்சில் நடந்து வருகிறது என்றார்.
No comments:
Post a Comment