புதிய பஸ் பாஸ் வழங்குவதில் தாமதம் ஏற்படும் என்பதால், தமிழகம் முழுவதும் மாணவர்கள் பழைய பாஸைக் காண்பித்து பஸ்களில் பயணிக்கலாம் என போக்குவரத்துக்கழகங்கள் அறிவித்துள்ளன. தமிழக அரசின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து போக்குவரத்துக்கழகங்கள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன. பள்ளி மாணவர்களுக்கு 2014-15 கல்வியாண்டுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கும் பணியை மாநகர மற்றும் நகர போக்குவரத்துக்கழகங்கள் மேற்கொண்டு வருகின்றன.
கடந்த 12ஆம் தேதி முதல் இதற்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. ஜூன் 2-ஆம் தேதி பள்ளிகள் தொடங்க உள்ள நிலையில், பூர்த்தி செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பது வெகுக் குறைவாகவே இருப்பதாலும் பல மாவட்டங்களில் பாஸ் தயாரிப்பதற்கான நிறுவனங்கள் தேர்வு செய்யப்படாததாலும் புதிய பாஸ்களை விரைவாக வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்துக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன. இது குறித்து போக்குவரத்துக்கழக உயர் அதிகாரி ஒருவர் கூறியது: பள்ளி மாணவர்களுக்கு புதிய பஸ் பாஸ்கள் வழங்குவதில் தாமதம் ஏற்படும் என்பதால், மாணவர்கள் 2013-ஆம் ஆண்டு வழங்கப்பட்ட இலவச பாûஸ காண்பித்து பஸ்களில் பயணிக்க அனுமதிக்குமாறு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளத
ு. அதன்படி, மாணவர்கள் ஆகஸ்ட் மாதம் வரை பழைய பாஸைக் காண்பித்து பஸ்களில் பயணிக்கலாம். இது தொடர்பாக பஸ் நடத்துநர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது என்றார்.
No comments:
Post a Comment