இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Sunday, January 19, 2014

அடைவுத்திறன் தேர்வு: ஆசிரியர்,மாணவர்களுக்கு தனி வினாத்தாள்

தமிழகத்தில், நாளை துவங்க உள்ள, 3, 5, 8ம் வகுப்பு ஆசிரியர், மாணவர்களுக்கென அடைவுத்திறன் தேர்விற்கான வினாத்தாள்கள் தனித்தனியாக தரப்படும் என, அனைவருக்கும் கல்வி திட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். அனைவருக்கும் கல்வி திட்டம் மூலம், மாநிலத்தில் 412 ஒன்றியங்களில், 3, 5, 8-ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களின் கற்றல் திறன் மற்றும் ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை சோதித்து அறியும், அடைவுத்திறன் தேர்வு நாளை துவங்க உள்ளது. இதற்காக, ஒன்றியத்திற்கு ஒவ்வொரு வகுப்பிற்கும், 10 பள்ளிகள் வரை தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இதில், 3 மற்றும் 5ம் வகுப்பிற்கு நாளை தமிழ், கணிதமும், 22-ல் ஆங்கிலமும், 8ம் வகுப்பிற்கு 23ல் தமிழ்,கணிதம், 24-ல் ஆங்கில தேர்வும் நடக்கும். தேர்வு அறைக்கு இரண்டு கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். ஒரு கண்காணிப்பாளர், ஆசிரியர் பயிற்றுனர் அல்லது சிறப்பு கல்வியாளர். இவர்கள் தான் பணிபுரியும் ஒன்றியத்திலிருந்து அடுத்த ஒன்றியத்தில் கண்காணிப்பாளராக இருக்க வேண்டும். இரண்டாவது கண்காணிப்பாளராக ஆசிரியர் ஒருவர் செயல் படுவார்கள்.மாணவர்களுக்கு ஒரு வினாத்தாளும், ஆசிரியர்களுக்கு ஒரு வினாத்தாளும், தனித்தனியாக வழங்கப்படும்.மாணவர்கள், ஆசிரியர்களின் அடைவுத்திறன் அடிப்படையில், அடுத்த இரண்டு ஆண்டுக்கான கல்வி திட்டம் தயாரிக்கப்படும்.

மாணவர், ஆசிரியர் விடைத்தாள் மதிப்பீடு செய்து, மதிப்பெண்கள் இணையதளம் மூலம், பதிவேற்றம் செய்யப்படும், என, அனைவருக்கும் கல்வி திட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment