"அரசு பொதுதேர்வு எழுத உள்ள பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவர்களிடம், தேர்வு கட்டணம் வசூலிக்க,” அரசு தேர்வுகள் துறை இயக்குனர் தேவராஜன் உத்தரவிட்டுள்ளார். தமிழகம், புதுச்சேரியில் மார்ச், ஏப்ரலில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொது தேர்வு நடைபெற உள்ளது. இதில், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.115; பிளஸ் 2 மாணவர்களில் 'பிராக்டிக்கல்' தேர்வுள்ள பாடங்களுக்கு ரூ.225; 'பிராக்டிக்கல்' தேர்வில்லாத பாடங்களுக்கு ரூ.175 வீதம், ஜன.,17 முதல் 23ம் தேதிக்குள், தலைமை ஆசிரியர் வசூல் செய்யவேண்டும். அரசு வங்கி கணக்கில், ஜன.,23 அன்று செலுத்தவேண்டும்.
அதற்கான விபரங்களை, ஜன.,24ல் கல்வி அலுவலரிடமும், மாவட்ட கல்வி அலுவலர்கள், ஜன.,27ல் அரசு தேர்வுகள் மண்டல துணை இயக்குனரிடம் ஒப்படைக்கவேண்டும், என தேவராஜன் தெரிவித்துள்ளார். சலுகை: கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு மாணவர்களிடம், தேர்வு கட்டணமாக, ரூ.125 வசூலிக்கப்பட்டது. இந்த ஆண்டு, ரூ.115 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment