பத்தாம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 26ம் தேதி தொடங்கி ஏப்ரல் 9ம் தேதி முடிகிறது. இந்த ஆண்டு சுமார் 12 லட்சம் மாணவ, மாணவியர் தேர்வு எழுதுகின்றனர். அதற்கான இறுதிப் பட்டியல் தயாரிக்கும் பணி தீவிரமாக நடக்கிறது. இதற்கிடையே பிளஸ் 2 தேர்வை எழுத உள்ள மாணவர்களின் இறுதிப் பட்டியல் (நாமினல்ரோல்) அனைத்து பள்ளிகளுக்கும் நேற்று வந்துள்ளது. தவிர, பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தேர்வுக் கட்டணம் செலுத்துவது குறித்து தேர்வுத் துறை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி பத்தாம் வகுப்பில் தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு தேர்வுக் க ட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்கள் தேர்வுக் கட்டணமாக ணீ115 செலுத்த வேண்டும். எம்பிசி, எஸ்சி, எஸ்டி மாணவர்கள் தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. பிசி மற்றும் ஓசி மாணவர்கள் கட்டணம் செலுத்த வேண்டும். மேலும், மேற்கண்ட தேர்வுக் கட்டணத்தை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாணவர்களிடம் இருந்து 17ம் தேதி முதல் 23ம் தேதிக்குள் கட்டணத்தை வசூலித்து கருவூலங்கள் மூலம் 24ம் தேதி தேர்வுத் துறை கணக்கில் செலுத்த வேண்டும் என்று தேர்வுத் துறை உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment