இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, January 14, 2014

தமிழக அரசில் 4,000 வேலை: டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு

தமிழகத்தில் அரசு துறைகளில், இந்தாண்டு குரூப்-1, குரூப்-2, குரூப்-4 , வி.ஏ.ஓ., உள்ளிட்ட பல தேர்வுகள் மூலம் 4,000 பேர் தேர்வு செய்யப்படவுள்ளனர். தமிழக அரசு துறைகளில் ஏற்படும் காலி பணியிடங்களை நிரப்பும் பணியை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மேற்கொள்கிறது. சில தேர்வுகளுக்கு எழுத்து தேர்வு மூலமும், சிலவற்றுக்கு எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் மூலமும் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். ஓர் ஆண்டில், என்னென்ன பதவிகள், தேர்வுகள், எந்த தேதிகளில் நடக்கிறது; எப்போது ரிசல்ட் அறிவிக்கப்படுகிறது;

நேர்காணல் எப்போது உள்ளிட்ட முழு விவரங்களுடன் கூடிய ஆண்டு தேர்வு கால அட்டவணையை, 2012ம் ஆண்டு டி.என்.பி.எஸ்.சி., தலைவராக இருந்த நட்ராஜ் அறிமுகப்படுத்தினார். அதிலிருந்து ஆண்டுதோறும், இதுபோன்ற கால அட்டவணை வெளியிடப்படுகிறது. இந்நிலையில், 2014ம் ஆண்டுக்கான கால அட்டவணையை ஜன.,10ம் தேதி, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் நவநீதகிருஷ்ணன் வெளியிட்டார். மொத்தம் 23 வகையான தேர்வுகள் இந்தாண்டு நடத்தப்படவுள்ளன. இதில் அதிகபட்சமாக வி.ஏ.ஓ., பணிக்கு, 2,342 பேரும், குரூப் 2 (நேர்காணல் இல்லாதது) பணிக்கு 1,181 பேரும், ஒருங்கிணைந்த இன்ஜினியரிங் தேர்வுக்கு 98 பேரும், தேர்வு செய்யப்படுகின்றனர். இது தவிர குரூப்-2 (நேர்காணல்) தேர்வு, குரூப்-4 தேர்வு ஆகியவையும் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் அதன் காலியிடங்கள் அறிவிக்கப்படவில்லை.

மேலும் அறிவிக்கப்பட்டுள்ள காலியிடங்களும் தோராயமானவை; அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. எனவே, இந்தாண்டு டி.என்.பி.எஸ்.சி., மூலம் 4,000 பேர் தேர்வு செய்யபடவுள்ளனர். இது போட்டித்தேர்வு எழுதும் மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபரங்களுக்கு: www.tnpsc.gov.in இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment