10 ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில், தேர்ச்சி விகிதம் அதிகரிப்பது குறித்து, மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம், மதுரையில், ஜன.,7 ல் நடக்கிறது. பள்ளி கல்வித் துறை சார்பில், மதுரையில் ஜன.,7ல், மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம், அமைச்சர் வீரமணி தலைமையில் நடக்கிறது. துறை செயலாளர் சபீதா உள்ளிட்ட இயக்குநர்கள் பங்கேற்கின்றனர். மதுரை, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்ட முதன்மை, மாவட்ட, தொடக்க, கல்வி அலுவலர்கள். பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வுகளில் 70 சதவீதத்திற்கும் குறைவான தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்கின்றனர். கூட்டத்தில், 10 ம் வகுப்பு, பிளஸ் 2 .தேர்வில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிப்பது, பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் விவரம், அடுத்த கல்வி ஆண்டில் துவக்கப்பட உள்ள ஆங்கில வழிக்கல்வி வகுப்புகள், முதல்வர் தனிப்பிரிவுக்கு அனுப்பபட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
இதே போல், ஜன.,6 ல் திருநெல்வேலியிலும், 8 ல் திருச்சியிலும், 10 ல் ஈரோட்டிலும், 11 ல் வேலூரிலும், ஜன., 27 ல் சென்னையிலும் ஆய்வு கூட்டம் நடக்கிறது.
No comments:
Post a Comment