78 பணியிடங்களுக்கான கடந்த மாதம் வெளியிடப்பட்ட குரூப்–1 தேர்வு ஏப்ரல் 26–ந் தேதி முதல்நிலை தேர்வு நடத்தப்படும். மெயின் தேர்வு செப்டம்பர் 20–ந் தேதி நடத்தப்படும். இந்த வருடம் அறிவிக்கப்பட உள்ள தேர்வு விவரங்கள் வருமாறு:–
குரூப்–2 தேர்வு
1181 பணியிடங்களுக்கான குரூப்–2 (நேர்முக தேர்வு கிடையாது) தேர்வு மே 15–ந் தேதி நடத்தப்பட்டு ஆகஸ்டு 3–வது வாரத்தில் முடிவு வெளியிடப்படும்.
டிராப்ட்ஸ்மென் 3–வது கிரேடு பதவிக்கு 5 பணியிடங்களுக்கு மே 3–ந் தேதி தேர்வு நடத்தப்பட்டு, ஜூலை 2–வது வாரத்தில் முடிவு வெளியிடப்படும்.
குரூப்–6 தேர்வில் வன பயிற்சியாளர்கள் 26 பேரை தேர்வு செய்ய ஜூன் 1–ந் தேதி தேர்வு நடத்தப்பட்டு முடிவு செப்டம்பர் 2–வது வாரத்தில் வெளியிடப்படும்.
மாவட்ட கல்வி அதிகாரிகள்
11 மாவட்ட கல்வி அதிகாரிகள் பணியிடங்களுக்கு ஜூன் 8–ந் தேதி முதல்நிலை எழுத்துதேர்வு நடத்தப்பட்டு ஜூலை 3–வது வாரத்தில் முடிவு வெளியிடப்படும். மெயின் தேர்வு ஆகஸ்டு 9–ந் தேதி நடத்தப்பட்டு நேர்முகத்தேர்வு நவம்பர் 2–வது வாரம் நடக்கும்.
2,342 கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிடங்களுக்கான தேர்வு ஜூன் 15–ந் தேதி நடத்தப்படும்.
குரூப்–5 தமிழ்நாடு தலைமைச்செயலக அலுவலர் பணிக்காக 25 பேரை தேர்வு செய்ய ஜூன் 22–ந் தேதி தேர்வு நடத்தப்படும். முடிவு ஆகஸ்டு 2–வது வாரத்தில் வெளியிடப்பட்டு, நேர்முகத்தேர்வு ஆகஸ்டு 4–வது வாரத்தில் நடத்தப்படும்.
என்ஜினீயரிங் பணி
உதவி மேலாளர் பணிக்கான 4 பேரை தேர்வு செய்ய ஜூன் 28–ந் தேதி தேர்வு நடத்தப்பட்டு, முடிவு ஜூலை முதல் வாரத்தில் வெளியிடப்படும். 4–வது வாரம் நேர்முகத்தேர்வு நடத்தப்படும். 98 என்ஜினீயரிங் பணிக்கான தேர்வு ஜூன் 29–ந் தேதி நடத்தப்பட்டு முடிவு ஜூலை முதல் வாரம் அறிவிக்கப்படும். ஜூலை 3–வது வாரத்தில் நேர்முகத்தேர்வு நடத்தப்படும்.
குரூப்–2 (நேர்முகத்தேர்வுடன் கூடியது) தேர்வுக்கு எத்தனை பணிகள் என்ற விவரம் பின்னர் அறிவிக்கப்படும். அந்த தேர்வு ஜூலை 6–ந் தேதி நடத்தப்படும். குரூப்–4 தேர்வு அக்டோபர் மாதம் 19–ந் தேதி நடத்தப்பட்டு, டிசம்பர் 2–வது வாரத்தில் முடிவு வெளியிடப்படும்.
மீண்டும் குரூப்–1 தேர்வு
குரூப்–1 முதல்நிலை தேர்வு 2015–ம் ஆண்டு ஏப்ரல் 3–வது வாரம் நடத்தப்பட்டு, ஜூன் 2–வது வாரம் முடிவு வெளியிடப்படும். மெயின் தேர்வு ஆகஸ்டு 2–வது வாரத்தில் நடத்தப்பட்டு, நவம்பர் முதல் வாரம் நேர்முகத்தேர்வு நடத்தப்படும். இவை உள்பட 29 வகையான தேர்வுகள் 2015–ம் ஆண்டு ஏப்ரல் வரை நடத்தப்பட உள்ளது.
தேர்வு எழுதுபவர்கள் அவர்கள் தமிழ் வழியில் படித்திருந்தால் அதற்கான சான்றிதழ்கள், சாதி சான்றிதழ்களை சரியாக சமர்ப்பிப்பதில்லை. இதுபோன்ற காரணத்தால் தான் தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்படுகிறது. 13 லட்சம் பேர் எழுதிய குரூப்–4 தேர்வு முடிவு இந்த மாத இறுதியில் அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் வெளியிடப்படும்.
இவ்வாறு நவநீதகிருஷ்ணன் கூறினார். ஆணையத்தின் செயலாளர் விஜயகுமார், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஷோபனா ஆகியோர் உடன் இருந்தனர்.
நேற்றைய அறிவிப்பில் மொத்தம் 3 ஆயிரத்து 700 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment