இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Monday, January 20, 2014

அரசு வேலை மற்றும் ஆசிரியர் பணிக்கென வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 90 லட்சம் பேர் பதிவு செய்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது, கடந்த ஆண்டு செப்டம்பர் மாத நிலவரப்படி உள்ள எண்ணிக்கையாகும் என்று தமிழக அரசின் இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது. மொத்தம் 90 லட்சத்து 13 ஆயிரத்து 163 பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளதாகவும், அவர்களில் 45 லட்சத்து 12 ஆயிரத்து 169 பேர் பெண்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என வகுப்புவாரியாக பதிவு செய்துள்ளோரின் எண்ணிக்கையும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கலப்புத் திருமணம் செய்தோர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் சிறப்புப் பிரிவினராகக் கருதப்படுகின்றனர். அதன்படி, கலப்புத் திருமணம் செய்த 27 ஆயிரத்து 640 பேரும், மாற்றுத் திறனாளிகள் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 543 பேரும் பதிவு செய்துள்ளனர். கல்வித் தகுதிகள்: இதில் 31 லட்சத்து 25 ஆயிரத்து 930 பேர் பத்தாம் வகுப்பு படித்தவர்களாகவும், பிளஸ் 2 முடித்தவர்கள் 22 லட்சத்து 66 ஆயிரத்து 195 பேரும் அடங்குவர். மேலும், இளநிலை பட்டங்களில் கலைப் படிப்புகள் படித்தோரில் 3 லட்சத்து 38 ஆயிரத்து 17 பேரும், அறிவியல் பிரிவில் படித்தவர்களில் 4 லட்சத்து 42 ஆயிரத்து 261 பேரும், வணிகப் பிரிவில் 3 லட்சத்து 76 ஆயிரத்து 153 பேரும், பட்டதாரி ஆசிரியர்களில் 3 லட்சத்து 70 ஆயிரத்து 14 பேரும், பொறியியல் பட்டதாரிகளில் 2 லட்சத்து 83 ஆயிரத்து 725 பேரும், மருத்துவம் படித்தோரில் 6 ஆயிரத்து 922 பேரும் தங்களது பெயர்களைப் பதிவு செய்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment